ETV Bharat / state

"இந்தி படித்து விட்டு பானி பூரி விற்கிறார்கள்" அமைச்சர் பொன்முடி பேச்சு - hindhi imposition

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று பலர் கூறினார்கள். ஆனால் பலரும் வட மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வருகின்றனர். சிலர் இங்கு பானி பூரி விற்கின்றனர் என்று உயர் கல்விதுறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஹிந்தி படித்து விட்டு சென்னைக்கு தான் வேலைக்கு வருகிறார்கள் அமைச்சர் பொன்முடி பேச்சு

author img

By

Published : Apr 30, 2022, 8:17 PM IST

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஏப். 30) திமுக மாணவரணி சார்பாக கல்வி - சமூக நீதி - கூட்டாட்சி தத்துவம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், "நான் 17 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றியவன். உங்களை பார்க்கும் பொழுது எனக்கு பழைய வகுப்புகள் எடுத்த நினைவுகள் வருகின்றன. மாநிலங்களை காப்பதே ஆளுநரின் வேலையாக இருக்க வேண்டுமே தவிர மத்திய அரசை காப்பதல்ல.

முன்னதாக, தனியார் கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவிற்கு சென்று இருந்தேன். அதில் 70 மாணவர்களில் 55 பெண்கள் பட்டம் பெற்றனர். அதிக மாணவர்கள் பட்டம் பெறுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று பலர் கூறினார்கள். ஆனால் பலரும் வட மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வருகின்றனர். ஒரு சிலர் பானி பூரி விற்றுக்கொண்டு இருக்கின்றனர்.

கலைஞரை எந்த துறையில் நுழைந்தாலும் சிறப்பாக ஜொலிப்பவர். எங்கள் காலத்தில் அவர் பட்ட கஷ்டத்தினால் தான் தற்பொழுது பல பெண்கள் படிக்கிறார்கள். அப்பாவிற்கு புள்ளை தப்பாமல் பிறந்துள்ளது என்பதை போல முக ஸ்டாலின் மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீட்டை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்" என்றார்.

இதையும் படிங்க:உத்தரப் பிரதேசத்தில் 45 ஆயிரம் கூம்பு ஒலிபெருக்கிகள் அகற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.