ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழகம் பிரிக்கப்படுமா? - அமைச்சர் விளக்கம் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

சென்னை எழும்பூரில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் எண்ணம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள்
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள்
author img

By

Published : Apr 14, 2022, 6:42 PM IST

சென்னை: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை என்ற அமைப்பின் சார்பில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பார்வையில் ‘கல்வியும் ஜனநாயகமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் விழாவில் உரையாற்றிய அமைச்சர் பொன்முடி, “அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி இன்று (ஏப்.14) முதலமைச்சர் அறிவிப்பின்படி சமத்துவநாளாக கொண்டாடி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களாகிய நாங்களும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டோம். சமூகநீதி, சமத்துவத்தை அனைத்து இடத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும். முக்கியமாக மாணவர்களின் உள்ளத்தில் உருவாக்க வேண்டும்.

சுதந்திரத்தைவிட சமத்துவம் முக்கியம்: படிக்கும்போதே மாணவர்கள் சமுதாய உணர்வைப் பெற வேண்டும் என்பதுதான் உண்மையான கல்வி என்பதை அம்பேத்கர் பிறந்தநாளில் மனதில் கொண்டு செயல்பட வேண்டும். சுதந்திரத்தைவிட சமத்துவம் முக்கியம் என்பதால்தான் அரசியலமைப்புச் சட்டத்திலேயே கொண்டு வந்துள்ளனர். கல்வி பொதுப்பட்டியலுக்குச் சென்ற பிறகு மாநில அரசுகளின் கலந்து ஆலோசிக்காமலேயே தேசியக் கல்வி கொள்கையை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் உள்ளன. ஒருமைப்பாட்டு உணர்ச்சிகளை உருவாக்குவது வேறு. ஆனால் உணவு, உடை, மொழி, படிப்பு என ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். வேறுபாடுகள் உணர்ந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை அரசியலைப்புச் சட்டத்தில் அம்பேத்கர் பல்வேறு வடிவங்களில் குறிப்பிட்டுள்ளார். சமத்துவ உணர்வை உருவாக்க வேண்டும் என்பதற்காக பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்தார்.

பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டிய கலைஞர்: காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக திமுக அரசு அறிவித்தது. தலைவர்கள் சொன்ன கொள்கைகளை இளைஞர்களிடையே உருவாக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்கான ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைவிட சமுதாய ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ளது. முதலில் சமுதாய ஏற்றத்தாழ்வுகளைப்போக்க வேண்டும். அதனைதான் அம்பேத்கரும், பெரியாரும் கூறினார்கள். அதனை போக்கும் விதத்தில் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். அம்பேத்கர் பிறந்த மாநிலத்தில் கூட பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயர் வைக்க முடியவில்லை. ஆனால், கலைஞர்; சென்னை சட்டப்பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை வைத்துள்ளார். புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பது போல் முதலமைச்சர் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்துள்ளார், முதலமைச்சர் ஸ்டாலின்” என்றார்.

அமைச்சர் பொன்முடி பேச்சு

பல்கலைக்கழகத்தைப் பிரிக்கும் எண்ணம் இல்லை: இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, 'அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப்பிரிக்கும் எண்ணம் இல்லை. மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்க குழு அமைக்கப்பட்டுப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு திட்டத்தை தடுக்க தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆளுநரிடம் நிலுவையிலுள்ள மசோதாக்களை கையெழுத்திடக்கோரி அமைச்சர் மா. சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் சென்று வலியுறுத்தியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “வட மாநிலத்தவர்கள் தமிழ்நாடு பள்ளிகளில் படித்தது போன்ற போலிச்சன்றிதழ் தயாரித்து, பணியில் சேர்ந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி பொதுப்பட்டியலிலும் இல்லாமல் மாநிலப் பட்டியலிலும் இல்லாமல் தற்போது ரகசியப் பட்டியலில் உள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (TET) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதற்கான அவசியம் இல்லை. தற்போது வரை ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் கடந்த 5 நாள்களில் விண்ணப்பித்துள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க: ஆளுநர் தேநீர் விருந்து- முதலமைசசர் மு.க. ஸ்டாலின் புறக்கணிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.