ETV Bharat / state

கோரிக்கை வைத்த அமைச்சர் சேகர்பாபு - நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த அமைச்சர் ஐ. பெரியசாமி - அமைச்சர் சேகர்பாபு

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோரிக்கையை ஏற்று சென்னை பாரிமுனை பிரகாசம் சாலை கூட்டுறவு சங்க மண்டபம் நவீனப்படுத்தப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

ஒரே மேடையில் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் ஐ. பெரியசாமி

author img

By

Published : Mar 31, 2022, 7:41 AM IST

சென்னை: பாரிமுனை பிரகாசம் சாலையிலுள்ள கூட்டுறவு சங்க கட்டிட வளாகத்தில் தங்க நகை கடன் தள்ளுபடி பெறுவோருக்கான ரசீது மற்றும் நகைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு நகை கடன் தள்ளுபடி ரசீது மற்றும் நகைகளை வழங்கினர்.

அப்போது மேடையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, நிகழ்ச்சி நடைபெறும் மண்டபம் தன்னுடைய துறைமுகம் தொகுதிக்கு உட்பட்டு இருந்ததால் அந்த மண்டபத்தை அழகுபடுத்த வேண்டும் எனவும், இதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், இதனை அனைவரும் பயன்படுத்தும் வகையிலான சிறந்த மண்டபமாக மாற்ற வேண்டும் எனவும் கூட்டுறவு துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.

மேலும், வங்கிகள் சார்பாக ஆண்டுதோறும் நலிவடைந்த மக்களுக்கு உதவிகள் செய்வது வழக்கம். அதேபோல் ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆன நிலையில் இந்த கூட்டுறவு வங்கிகள் மூலமாக நலிவடைந்த மக்களுக்கு உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

அதற்கு பின்னர் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி கூறியதாவது, “இந்து அறநிலைய துறை அமைச்சர் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அரங்கத்தை நல்ல அரங்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பணிகளை கூட்டுறவு துறை அதிகாரிகள் மேற்கொள்வார்கள்.

ஒரே மேடையில் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் ஐ. பெரியசாமி

ஆனால், இந்த மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என ரிசர்வ் வங்கி விதிகள் உள்ளது. இருந்தாலும் கூட்டுறவு துறை சார்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்த மண்டபத்தில் நடைபெறுவதால் அரங்கை நவீனமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

நிகழ்ச்சி மேடையிலேயே தன் தொகுதியில் உள்ள கூட்டுறவு சங்க மண்டபத்தை மேம்படுத்த சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் அமைச்சர் சேகர்பாபு கோரிக்கை வைத்து அந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி வாக்குறுதி அளித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: மக்களவை தேர்தலின்போது, பறிமுதல் செய்யப்பட்ட பணம் யாருடையது? திமுக எம்.பி. கதிர் ஆனந்த் வழக்கு!..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.