புதுச்சேரி: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தையொட்டி இன்று (ஜூலை 21) கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் லட்சுமிநாராயணன், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் வைத்தியநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து சிவாஜி கணேசன் தீவர ரசிகர்கள் பலரும் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதையும் படிங்க: நடிப்பு கற்க கல்லூரி வேண்டாம் - சிவாஜி போதும்