ETV Bharat / state

'மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை கோருவது தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் - tamilnadu jobs for tamilnadu people

சென்னை: மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க பரிசீலனை செய்து சட்டம் இயற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும், அந்த கோரிக்கையை வலியுறுத்துவதில் ஒன்றும் தவறில்லை எனவும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வேலை தமிழருக்கே  அமைச்சர் பாண்டியராஜன்  tamilnadu jobs for tamilnadu people  சென்னை செய்திகள்
'மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை கோருவது தவறில்லை'- அமைச்சர் பாண்டியராஜன்
author img

By

Published : Aug 24, 2020, 8:58 PM IST

திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட நூம்பல் பகுதியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு புதிய ரேஷன் கடையைத் திறந்து வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இ- பாஸ் முறை மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி நடைபெற்றுவருகிறது. மேலும், மாநில நிலவரத்தைப் பொறுத்தவரை இ- பாஸ் ரத்து செய்வது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்.

தமிழ்நாடு வேலை தமிழருக்கே  அமைச்சர் பாண்டியராஜன்  tamilnadu jobs for tamilnadu people  சென்னை செய்திகள்
பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கிய அமைச்சர்

இ-பாஸ் தளர்வு அளிக்கப்பட்டதிலிருந்து வட சென்னையில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. தமிழ்நாடு அரசின் வேலைகளில் 90 விழுக்காடு வேலை தமிழக மக்களுக்கே வழங்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து சட்டம் இயற்றினார் அளிக்கப்பட்டுவரும் வேலைவாய்ப்பு விகிதம் குறைய வாய்ப்புள்ளது.

'மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை கோருவது தவறில்லை'- அமைச்சர் பாண்டியராஜன்

மத்திய அரசு வேலைகளில் அந்தந்த மாநிலத்தில் உள்ள மக்களையே பெரும்பாலும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவது தவறில்லை. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இதற்கு தனிச்சட்டம் இயற்றியுள்ளனர். மேலும், இதுகுறித்து பரிசீலனை செய்து தமிழ்நாட்டில் சட்டம் இயற்ற முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்" என்றார்.

இதையும் படிங்க: ”தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே!” - திருமாவளவன் எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.