'உவமைக் கவிஞர்' சுரதாவின் 99ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, சென்னை அசோக் பில்லரிலுள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழ்நாடு அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா. வளர்மதி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மு.க.ஸ்டாலின் கூறினால் அதிமுக எம்.எல்.ஏக்கள் 10 பேர் அறிவாலயம் வருவார்கள் என்ற செந்தில் பாலாஜியின் கருத்துக்கு பதிலளித்த அவர், இந்த பேச்செல்லாம் முழுக்க முழுக்க திசை திருப்பும் செயல். முதலில், ஸ்டாலின் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றட்டும் என்றார்.
அதனையடுத்து, விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்புகள் செய்யப்படுமா என்றக் கேள்விக்கு, பிரதமர் சென்னை வந்தபோது தமிழ்நாட்டிலுள்ள விமான நிலையங்களில், தமிழில் அறிவிப்பு கொண்டு வரப்படும் எனக் கூறியிருந்தார். அது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என அவர் தெரிவித்தார்.
கேரள மாணவி ஃபாத்திமா உயிரிழந்த வழக்கு தொடர்பான கேள்விக்கு, ஏற்கனவே அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் நிச்சயமாக காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்ததை வரவேற்கிறேன் - சரத்குமார்!