ETV Bharat / state

'கரோனா போரில் வெற்றியடைந்தே ஆக வேண்டும்' - அமைச்சர்  பாண்டியராஜன்! - corona infection test to chennai

சென்னை: அடுத்த ஒன்பது நாள்களில் கரோனா போரில் வெற்றியடைந்தே ஆகவேண்டும், இதற்கு மேலும் ஊரடங்கு நீட்டிப்பது சாத்தியமில்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

k.pandiarajan
k.pandiarajan
author img

By

Published : Jun 22, 2020, 8:43 PM IST

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்டப் பகுதிகளில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தொற்று தடுப்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து களப் பணியாளர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது, "தண்டையார்பேட்டை மண்டலத்தில் தினமும் 200க்கும் மேற்பட்டோருக்கு சோதனை செய்யப்படுகிறது. மக்கள் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று குறித்து பரிசோதனை செய்து கொள்ளலாம். அரசு மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப இடங்கள் உள்ளன.

நியாய விலைக்கடைகளில் மக்களுக்கு கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாயை வீட்டில் தான், கொண்டு போய் கொடுக்க வேண்டும். இதைத்தவிர பொதுமக்களை அழைத்து கடைகளுக்கு முன் கொடுப்பது சட்டப்படி குற்றம்.

எல்லா மாவட்டங்களிலும் அமைச்சர்கள் கூடுதல் பொறுப்பு எடுத்து கண்காணித்து வருகிறார்கள். எந்தவொரு மாவட்டமும் கவனக்குறைவால் விடுபட்டுப் போய்விட்டது என்று சொல்ல முடியாது.

கண்டிப்பாக அடுத்த ஒன்பது நாள்களில் கரோனா போரில் வெற்றி அடைந்தே ஆக வேண்டும். இதற்கு மேலும் ஊரடங்கு நீட்டிப்பு சாத்தியமில்லை" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசில் சமூக நீதி என்பதே கற்பனையா? - பா. ரஞ்சித்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.