சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது செங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் மு.பெ.கிரி செங்கம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, “செங்கம் சார்பதிவு அலுவலகம் 2990 சதுர அடி கட்டடத்தில் இயங்கி வருகிறது.
சமீபத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு புதிய கட்டடம் கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்கும் ” என்றார். மேலும், “பத்திர அலுவலகத்தை பொறுத்தவரையில் தாலுகா எல்லைக்கு உட்பட்டு அனைத்து சார்பதிவாளர் அலுவலக எல்லை சீரமைக்கப்பட்டு வருகிறது ” என்றார்.
இதையும் படிங்க: மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வழங்குவோம் - ஸ்டாலின்