ETV Bharat / state

‘அனைத்து சுனாமி வீடுகளும் சீரமைக்கப்படும்’ - அமைச்சர் ஓ.எஸ். மணியன் - Tsunami News

நாகை: அனைத்து சுனாமி வீடுகளையும் சீரமைக்க கணக்கெடுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

‘அனைத்து சுனாமி வீடுகளும் சீரமைக்கப்படும்’ -அமைச்சர் ஓஎஸ்.மணியன்!

author img

By

Published : Dec 26, 2020, 1:26 PM IST

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச. 26) 16ஆம் ஆண்டு சுனாமி நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், நாகை மக்களவை உறுப்பினர் செல்வராசு, மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் உள்ளிட்ட அலுவலர்கள், பள்ளி மாணாக்கர் கலந்துகொண்டு சுனாமிநாள் ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து, மலர்த்தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

‘அனைத்து சுனாமி வீடுகளும் சீரமைக்கப்படும்’ - அமைச்சர் ஓ.எஸ். மணியன்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ். மணியன், “சுனாமிக்காக கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளுக்கும் 99.9 விழுக்காடு அவர்கள் பெயர்களில் பட்டா வழங்கப்பட்டுவிட்டது. மேலும் சேதமடைந்த சுனாமி வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது. கணக்கெடுப்புக்குப் பின் நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து சுனாமி குடியிருப்புகளும் சீரமைக்கப்படும்” என்றார்.

இதேபோன்று, சுனாமி நினைவுநாளையொட்டி வேளாங்கண்ணி பேராலயம் சார்பாக சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்வகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

இதையும் படிங்க...தொடர் கொலை மிரட்டல்! - பாதுகாப்பு கேட்கும் பெண் ஊராட்சி மன்றத் தலைவர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.