இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை , விருகம்பாக்கம் , வேம்புலி அம்மன் கோயில் தெரு , அருகில் உள்ள மூன்று ஏக்கர் 28 சென்ட் நிலத்தை கடந்த 1913 ஆம் ஆண்டு சுசான் மக்கான் அறக்கட்டளை ( வக்பு ) வாங்கியது .
இந்த அறக்கட்டளை (வக்ஃபு) பிற்காலத்தில் தமிழ்நாடு வக்ஃபு வாரிய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது . மேற்கண்ட வக்ஃபு வாரிய நிலத்தை இன்றைய தேதி வரை தமிழ்நாடு வக்ஃபு வாரியமே குத்தகை விட்டு பராமரிப்பு செய்து வருகிறது .
இதற்கிடையில் ஆற்காடு நவாபின் பின்தொடர்ச்சி வாரிசு என்று கூறி கொண்ட நவாப் அலிகான் போலி ஆவணங்களை உருவாக்கி நெடுமாறன் என்பவருக்கு கிரயம் செய்துள்ளார். இதையடுத்து,நெடுமாறன் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றுடன் அந்நிலத்தில் பல்நோக்கு அடுக்குமாடி கட்டிடம் கட்ட ஒப்பந்தமிட்டுள்ளார்.
அதனை அறிந்த அதே பகுதியை சேர்ந்த குத்தகைதாரர் , இஸ்லாமியர்கள்மற்றும் சமூக ஆர்வலர்கள் பல்வேறு வகையான சட்ட போராட்டங்களை நடத்தினர். இதற்கிடையில் நில மாஃபியா கும்பலை சேர்ந்த நவாப் அலிகான் 2000ஆம் ஆண்டு சென்னை வக்பு தீர்ப்பாயத்தில் சொத்திற்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்தார்.
அவ்வழக்கு சுமார் 18 ஆண்டுகள் நிலுவையில் இருந்ததை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர், வக்ஃபு வாரிய நிலத்தை மீட்க தனி நீதிமன்றம் அமைக்க அரசாணை பிறப்பித்தார். இதனடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் இருந்த வழக்கை மெரினா கடற்கரை எதிரில் அமைந்துள்ள தனி சிறப்பு நிதிமன்றம் எடுத்து விசாரித்து இறுதி தீர்ப்பை தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு சாதகமான வழங்கியது.
இதற்காக அரசாணை வெளியிட்டு வக்ஃபு வாரிய இடத்தை மீட்ட தமிழ்நாடு முதலமைச்சர் , சிறப்பாக வாதாடிய வழக்கறிஞர்கள் குழுவையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.