ETV Bharat / state

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறையா.? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் - Ma Subramanian about school leave

இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பால் பதட்டப்படவோ அல்லது அச்சப்படவோ தேவையில்லை என்றும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறையா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

author img

By

Published : Mar 15, 2023, 7:27 PM IST

சென்னை: கிண்டியில் உள்ள சென்னை ஐஐடி வளாகத்தில், ‘தமிழ்நாட்டில் தற்கொலையால் ஏற்படும் சமூக - பொருளாதார இழப்பு’ குறித்து ஐஐடி பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன் மற்றும் நிஜினா நாசர் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி ஆகியோர் வெளியிட்டனர்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் தற்கொலைகளைத் தடுக்க 6 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்காலிகமான அடிப்படையில் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதனை மத்திய அரசு மூலம் நிரந்தரமாக தடை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் தற்கொலை முயற்சிக்கு சானிப்பவுடர் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்கொலைக்கு பயன்படும் பொருட்களை வெளிப்படைத் தன்மையுடன் மருந்தகம் மற்றும் இதர கடைகளில் விற்பனை செய்யக் கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் விவசாயிகள் மட்டும் 559 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிக்கையில் தெரிய வந்துள்ளது. மாணவர்கள் இடையே தற்கொலை எண்ணங்கள் அதிகரித்து வருகிறது.

மாணவர்களிடம் அதிகரிக்கும் தற்கொலை உயிரிழப்புகளைத் தடுக்க, தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ‘மனம்’ என்ற மனநல நல்லாதரவு மன்றம் தொடங்கப்பட்டு, அதன் முதற்கட்டமாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த மனம் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில், வரும் கல்வியாண்டில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலைக்கான காரணங்களாக 4 காரணிகள் கண்டறியப்பட்டுள்ளது.

ஐஐடி இயக்குனர் காமகோடி, தற்கொலைகளைத் தடுப்பதற்கு வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே மருத்துவக் கல்லூரியில் செயல்படுத்துவதுபோல், ஐஐடியிலும் மனம் அமைப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சாலை விபத்துகளில் 1.5 லட்சம் பேரும், தற்கொலை முயற்சியை 2.5 லட்சம் பேரும், தற்கொலை மரணங்கள் 1 லட்சம் என்ற எண்ணிக்கையிலும் இருக்கிறது. உலகத்தில் தற்கொலைகள் அதிகம் நடக்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது.

இந்தியாவில் 1.5 லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுவதாக ஆய்வறிக்கை தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அதிகரிக்கும் சாலை விபத்துகளை குறைக்க ‘இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா கால கட்டத்திற்குப் பின் மாணவர்கள் தனிமையுடன் இருப்பதையே விரும்புகின்றனர். சமூகத்துடன் ஒன்றினைந்து பயணிக்க மாணவர்கள் தயங்குகின்றனர். இதுவே மன அழுத்தம் அதிகரிக்கக் காரணம் ஆகும்.

தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு முகாம்கள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் பதற்றமோ, பீதியோ அடையத் தேவையில்லை. திருச்சியில் 27 வயது இளைஞர் உயிரிழந்தது, கரோனா தொற்றாலா அல்லது வைரஸ் காய்ச்சலா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதன் அறிக்கை வந்த பின்னர் வெளியிடப்படும். தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் தற்போது இல்லை. தமிழ்நாட்டில் அதற்கான அவசியம் இல்லை. பதட்டமோ, பயமோ பொதுமக்கள் அடைய வேண்டாம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் தொடரும் தற்கொலைகள்.. இயக்குநர் காமகோடி விளக்கம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.