ETV Bharat / state

குளிர்காய நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி: அமைச்சர் பாண்டியராஜன் - minister mafa pandiarajan

சென்னை: அதிமுக இரண்டாக பிளவுபடும், அதில் குளிர் காயலாம் என நினைத்த திமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சியினருக்கு சம்மட்டி அடி விழுந்துள்ளதென அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்ச் சந்திப்பு

author img

By

Published : Oct 8, 2020, 12:38 PM IST

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற போட்டி நிலவிவந்தது. இதனையடுத்து நேற்று (அக். 8) அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வம் அறிவித்தார். இதனை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில், ஆவடியில் தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து பட்டபிராமிலுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அப்பகுதி மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஈபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தளுக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு கட்சிப் பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கட்சிகளையும்விட முன்னணியாக தேர்தல் பணியை அதிமுக செய்துவருகிறது.

ஈபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததில் கட்சியில் யாருக்கும் அதிருப்தியோ மன வருத்தமோ இல்லை. அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் குழப்பங்கள் நீடித்து வந்த சூழலில் ஈபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படத்தின் மூலம் இந்த பிரச்னையில் குளிர்காய நினைத்த கட்சிகளுக்கு சம்மட்டி அடியாக இந்த அறிவிப்பு உள்ளது. குறிப்பாக திமுக, அமமுக கட்சிகளுக்கு இந்த விஷயத்தில் ஏமாற்றமே கிடைத்துள்ளது” என்றார்.

அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர் சந்திப்பு

மேலும் பேசிய அவர்,“தொல்லியல் துறை பட்டய மேற்படிப்பில் புராதன மொழிகளில் தமிழ் மொழியை குறிப்பிடாதது குறித்து மத்திய பண்பாட்டு அமைச்சகத்திற்கு எடுத்துக்கூறி தமிழ்மொழியும் இடம்பெற விரைவில் தீர்வு காணப்படும்”என உறுதியளித்தார்.

இதையும் படிங்க...'கட்டுமான பணி நிறைவு சான்று... விதியை நீக்கினால் அனுமதியை மீறுவோருக்கு என்ன தண்டனை?'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.