ETV Bharat / state

தமிழுக்கு துரோகம் செய்ய மாட்டோம் - மாஃபா பாண்டியராஜன் - செய்தியாளர் சந்திப்பு

சென்னை: பழையக் கல்வி முறையை நீக்கி புதியக் கல்விக்கொள்கையில் அனைவருக்கும் நன்மைதரும் அம்சங்களைக் கொண்டுவர முயற்சிப்போம் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மா ஃபா பாண்டியராஜன்
author img

By

Published : Jul 14, 2019, 10:50 AM IST

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 117ஆவது பிறந்தநாளை முன்னிட்டு குன்றத்தூரில் நாடார் சங்கத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் பழனி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.

மா ஃபா பாண்டியராஜன்

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அஞ்சல் துறை தேர்வுகளில் தமிழ், மற்ற மாநில மொழிகளில் எழுதக் கூடாது என அறிவிப்பு வந்துள்ளது தவறு என சுட்டிக்காட்டினார். தமிழுக்கு அதிமுக அரசு துரோகம் இழைக்காது; தமிழை இழிவுபடுத்தும் செயலை யார் செய்தாலும் அதிமுக அரசு எதிர்த்துக் குரல் கொடுக்கும் என கூறிய அவர், புதிய கல்விக்கொள்கை என்பது வெறும் வரைவுதான் என்றார். ஜுலை 31ஆம் தேதி வரை கருத்து கூற நேரம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மா ஃபா பாண்டியராஜன்

மேலும், மும்மொழிக் கொள்கை என்ற ஒன்றை வைத்துகொண்டு இது அனைத்தும் தவறு எனக் கூற முடியாது எனக் குறிப்பிட்ட பாண்டியராஜன், புதிய கல்விக் கொள்கையில் அனைவருக்கும் நன்மைதரும் அம்சங்களைக் கொண்டுவர முயற்சிப்போம் என்றார். தமிழ்நாடு அரசு எதை ஏற்றுக்கொள்கிறது, எதை எதிர்க்கிறது என முடிவு செய்து தமிழ்நாடு இளைஞர்கள் நலன் பாதிக்காத வகையில் செயல்படுவோம் எனவும் அவர் கூறினார்.

Intro:தபால்துறை தேர்வுகளில் தமிழில் தேர்வு எழுத முடியாது என மத்திய அரசு கூறியது தவறு தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குன்றத்தூரில் பேட்டிBody:தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு குன்றத்தூரில் நாடார் சங்கத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இதற்கு தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பண்ணடியராஜன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியில் மாணவர்களை காமராஜரின் பணிகளை குறித்து பறை இசை நிகழ்ச்சி காண்போரை கவர்ந்தது.Conclusion:பின்னர் நிருபர்களை சந்தித்த தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்ண்டியராஜன் தபால் துறை தேர்வுகளில் தமிழ் மற்றும் மற்ற மாநில மொழிகளில் எழுத கூடாது என அறிவிப்பு வந்துள்ளது தவறு என தெரிவித்துள்ளார்.எதிர்கட்சிகளை போல கண்டனம் மட்டும் செய்யாமல் இதனை தடுக்க எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது,மத்திய அமைச்சர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளிடம் பேசிவருவதாக தெரிவித்தார்.மத்திய அரசு தொடர்ந்து தமிழக விரோதமாக செயல்படுவதுன்பற்றிய கேள்விக்கு ஏற்கனவே ரயில்வே துறையில் ஊழியர்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்வதுகுறித்து புது சட்டம் இயற்றியது அதனை அமைதியாக கேட்டும் எதிர்க்கட்சிகள் போராடியும் பெற்றுதந்தனர்.இந்தநிலையில் தபால் துறையில் இதுபோன்ற செயல் நடக்கிறதுதமிழை இழிவு படுத்தும் செயலை யார் செய்தாலும் அதிமுக அரசு எதிர்த்து குரல் கொடுக்குமென கூறினார்.தொடர்ந்து பேசிய அவர் புதிய கல்விக்கொள்கை குறித்த சூர்யாவின் பேச்சுக்கு புதிய கல்விக்கொள்கை என்பது வெறும் வரைவுதான் ஜுலை31ம் தேதி வரை கருத்து கூற நேரம் உள்ளது இதில் எடுத்துரைப்போம் என கூறிய அவர் மும்மொழி கொள்கை என்பது ஒன்றைவைத்து இது அனைத்தும் தவறு என கூற முடியாது.பழைய கல்வி கொள்கையில் இருந்த குறைகளை நீக்கி அதிகமான புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. தமிழக அரசு எதை ஏற்றுக்கொள்கிறது எதை எதிர்க்கிறது என முடிவு செய்து தமிழக நலன் மற்றும் தமிழக இளைஞர்கள் நலன் பாதிக்காத வகையில் எடுத்துக்கொண்டு செல்வோம் என தெரிவித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.