ETV Bharat / state

மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர் - 4 மருத்துவர்கள் சஸ்பெண்ட் - மதுராந்தகம் அரசு மருத்துவமனை

மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி விடுப்பு எடுத்த 4 மருத்துவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர்

author img

By

Published : Dec 15, 2022, 3:31 PM IST

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (டிச 15) திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அங்கு சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளைப் பார்வையிட்டு அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளைக் கேட்டறிந்தார்.

மேலும், சித்தா பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்கம், பிரசவத்திற்கு பிந்தைய வார்டு, ஆய்வகம் போன்ற அனைத்துப் பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 4 மருத்துவர்கள் விடுப்பு எடுத்துள்ளனர்.

இதனால் அவர்கள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும், இதைக் கண்காணிக்காத செங்கல்பட்டு, இணை இயக்குநர் நலப் பணிகள் வேறு மாவட்டத்திற்கு பணியிடமாறுதல் செய்யுமாறும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அரியலூர் விவசாயி மரண வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு தலையிடக்கூடாது: உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.