ETV Bharat / state

பொது மருத்துவக் கலந்தாய்வை அனுமதிக்கமாட்டோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி! - Minister Ma Subramanian informed Will not allow

தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டில் பொது மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படாது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், வரும் ஆண்டுகளில் இந்த பொது மருத்துவக் கலந்தாய்வை தடுப்பதற்கும் மத்திய அமைச்சரை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் தேவைப்பட்டால் சட்ட போராட்டமும் நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 12, 2023, 5:01 PM IST

சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரியின் 187வது நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஜூன் 12) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி நிறைவு சான்றிதழ்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் வழங்கினர்.

பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'பொது கலந்தாய்வை மத்திய அரசே நடத்தும் என்ற அறிவிப்பு கண்டனத்திற்குறியது என்றார். அகில இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தப்பட்டால் தமிழக மாணவர்களுக்கான முன்னுரிமை பறிபோகும் எனத் தெரிவித்தார். அதிகளவு மருத்துவக் கல்வி இடங்களை வைத்துள்ள தமிழகத்தில், தமிழர்கள் அல்லாத மாநிலங்களை சேர்ந்தவர்களும் பயன்பெறுவர் என்றார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பொது கலந்தாய்வு என்ற அறிவிப்பு மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பொது கலந்தாய்வு முடிவை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என்று கூறியுள்ளார்.

பட்டமளிப்பு விழாவில் அதிக பதக்கம் பெற்றவர்: இந்த பொது மருத்துவக் கலந்தாய்வுக்கு, எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் ஏற்கனவே, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தாக கூறிய அவர், அக்கடிதத்தையும் பொருட்படுத்தாமல் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பொது கலந்தாய்வு நடத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது' எனப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மருத்துவ கல்லூரியின் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றதாகவும், இதில் 248 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். இதில், மாணவர்களுடன் பெற்றோர்களும் பங்கேற்றனர். இதில் வீர சிவபாலன் என்ற மாணவன் அனைத்து பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெற்று பல்வேறு வகைகளில் தன்னார்வலர்கள் தந்த மருத்துவப் பதக்கங்களை பெற்று இருப்பதாக தெரிவித்தார்.

'பொது மருத்துவக் கலந்தாய்வு' வேண்டாம் என கடிதம்: கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையை பொறுத்தவரையிலும் தொடர்ந்து முன்னேறி இந்த ஆண்டு 11ஆம் இடத்தை பெற்றுள்ளது. இந்திய அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு நடத்தும் கல்லூரிகளில் சென்னை மருத்துவக் கல்லூரி முதலிடம் பெற்றுள்ளதாக பெருமிதம் கூறினார். மேலும், பொது கலந்தாய்வு குறித்து அறிவிப்பு வெளியானதும், மத்தியஅரசுக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. மாநிலங்களின் பங்பளிப்பை குறைக்கும், விதிமுறைகளுக்கு எதிரானது என பல்வேறு விஷயங்கள் குறிப்பிட்டு, பொது கலந்தாய்வு ஏற்புடையதல்ல என கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மத்திய அமைச்சரிடம் விளக்குவோம்: மாநில உரிமைகளை மீரும் வகையில் அறிவிப்புகள் ஏற்புடையதல்ல. அனைத்து தரப்பிலும் எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பொது கலந்தாய்வு நடத்தப்பட்டால் அதனை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கவும் நேரம் கேட்கப்பட்டுள்ளது. கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா (Kalaignar Memorial Multi Super Specialty Hospital) முடிந்ததும் வரும் ஜூன் 16, 17, 18 ஆகிய தேதிகளில் டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து, பொது கலந்தாய்வு நடந்தால் மாணவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என விளக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் சேர்க்கைக்கு பாதிப்பு: கடந்த ஆண்டு கூட 7.5 சதவீதத்தின் கிராமப்புற மாணவர்கள், ஏழை எளிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் கீழ் 580 மாணவர்கள் படிப்பதற்கு இதன் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறிய அவர், பெருமை வாய்ந்த சென்னை மருத்துவக்கல்லூரி உள்ளிட்டவற்றில் இந்த பொது கலந்தாய்வினால் மாணவர்கள் சேர்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்றார். மேலும், பொது கலந்தாய்வு தமிழகத்தில் நடக்காத வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு சலுகைகளும் பாதிக்கப்படும் என்பதால், தமிழக மக்களின் கோரிக்கையாக இதனை மத்திய அரசிடம் முறையிடுவோம் என்றார்.

பொது மருத்துவக் கலந்தாய்வுக்கு எதிராக சட்ட போராட்டம்: மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரனின் பிரதான் சொந்த மாநிலமான ஒடிசாவிலும் 'நீட் தேர்'-வுக்கு (NEET Exam) எதிர்ப்பு உள்ளதாகவும், இருப்பினும் அவை உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் என்பதாலே அதனை அங்கு செயல்படுத்தியதாக அவரே கூறியதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தற்போது நீட் தேர்வுக்கு அரசு சார்பில் மேற்கொண்டு வரும் சட்ட போராட்டங்களை போல, பொது கலந்தாய்வுக்கும் சட்ட போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், மருத்துவக் கல்வியில் பொது கலந்தாய்வு என்பது இந்த வருடம் இல்லை என்றும் அடுத்த வருடத்தில் கொண்டு வருவதற்கான முயற்சி மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளை அடையாளப்படுத்தி தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஏற்கனவே கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் ஆகவே, பொது கலந்தாய்வு கொள்கையை ஒருபோதும் தமிழகத்தில் கொண்டு வர விடமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தலில் விசிக யாருடன் கூட்டணி - திருமாவளவன் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.