ETV Bharat / state

சென்னையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

இந்தியாவிலேயே முதல் முறையாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகில் ஏற்படுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Sep 2, 2021, 4:25 PM IST

Updated : Sep 2, 2021, 5:42 PM IST

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் 110 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், "15ஆவது நிதி ஆணையத்தால் மருத்துவத்துறை மேம்பாட்டிற்காக தமிழ்நாட்டிற்கு வரும் ஐந்து ஆண்டுகளுக்கு புரிந்துரைத்துள்ள 4,280 கோடி ரூபாய் நிதியை பயன்படுத்தி வட்டார அளவிலான மருத்துவமனைகள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு நோய் கண்டறியும் கருவிகள் வழங்கப்படும்.

செவிலியர் கண்காணிப்பு

மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டம் ரூபாய் 258 கோடி செலவில் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கப்படும். தமிழ்நாட்டில் முதல் முறையாக அரசு மருத்துவமனைகளில் செவிலியர் கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தி 1,583 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுகள் 266.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

25 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 18 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தலா 2.27 கோடி ரூபாய் வீதம் பன்முக உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவுகள் 97.49 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

8 அரசு மருத்துவமனைகளில் தலா 50 கோடி ரூபாய் வீதம் 72 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டு தரம் உயர்த்தப்படும்.

அவசரகால மகப்பேறு

தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ சேவையை வலுப்படுத்த 389 புதிய நடமாடும் மருத்துவ குழு வாகனங்கள் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும். திண்டிவனம், தாம்பரம், ஸ்ரீவல்லிபுத்தூர், கோபிசெட்டிபாளையம், அம்பாசமுத்திரம் மற்றும் தென்காசி ஆகிய 6 அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு தலா 6.90 கோடி ரூபாய் வீதம் புதிய கட்டடங்கள் 41.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

ஊரகப் பகுதிகளில் உள்ள 2,400 துணை சுகாதார நிலையங்கள் நலவாழ்வு மையங்கள் ஆக 35.52 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். மரபணு ரத்த நோய்களான தலசீமியா மற்றும் ஹீமோபிலியா சிகிச்சைக்காக மருந்துகள் மற்றும் உபகரணங்கள் 10 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு 34 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

ஆக்சிஜன் களன்கள்

முதலமைச்சருடன் அமைச்சர் மா. சுப்பிரமணியன் சந்திப்பு

57 ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு மையங்களில் தங்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைக்க 25.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திரவ மருத்துவ ஆக்சிஜன் களன்கள் அமைக்கப்படும். தென்காசி, மயிலாடுதுறை மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளில் 19.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி நிறுவப்படும்.

கரோனா நோய் கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை மேலாண்மை பணிகளை கண்காணிக்க 286 அரசு மருத்துவமனைகளுக்கு 18.61கோடி ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் வழங்கப்படும். 29 ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் பிரிவு கட்டடங்கள் தலா 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 17.40 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

கண் அறுவை சிகிச்சை அரங்குகள்

அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு
அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு

23 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த தலா 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 17.25 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும். கண் அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் நவீன உபகரணங்கள் தேசியப் பார்வை இழப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் 5.70 கோடி ரூபாய் செலவில் புதிதாக வழங்கப்படும்.

11 அரசு மருத்துவமனைகளுக்கு காது கேளாமை தடுப்பு சிகிச்சைக்காக உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் 2.25 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். காது கேளாமை தடுப்பு சிகிச்சைக்காக அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சிகள் மற்றும் 14 அரசு மருத்துவமனைகளில் ஒளிபுகா அறைகள் 4.22 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

ரத்த சிவப்பணுக்கள் உறைநிலை சேமிப்பு அழகு

அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு
அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு

மூன்று தாய் சேய் நல திறன் பயிற்சி பள்ளிகளில் 3.5 கோடி ரூபாய் செலவில் புதிய விடுதிகள் கட்டப்படும். தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அரிய வகை ரத்த சிவப்பணுக்கள் உறைநிலை சேமிப்பு அழகு 3.75 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

74 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை மையங்களுக்கு 3.83 கோடி ரூபாய் செலவில் நவீன உபகரணங்கள் வழங்கப்படும். 16 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 25 லட்சம் வீதம் 4 கோடி ரூபாய் செலவில் செவிலியர் குடியிருப்புகள் கட்டப்படும். மதுரை மற்றும் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான ஒப்புயர்வு மையங்கள் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

ஆர்டிபிசி பரிசோதனை கருவிகள்

அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு
அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு

17 புதிய ஆர்டிபிசி பரிசோதனை கருவிகள் 5.10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். 11 ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் ரத்த வங்கிகள் 5.50 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும். 13 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 45 லட்சம் ரூபாய் வீதம் 5.85 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும்.

அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பேறுகால சேவையை மேம்படுத்த லக்ஷயா திட்டத்தின் கீழ் 6.31 கோடி ரூபாய் செலவிடப்படும். 2025ஆம் ஆண்டிற்குள் காச நோயை ஒழிக்கும் நோக்கில் 7 கோடி ரூபாய் செலவில் 10 ஊடுகதிர் வாகனங்கள் வழங்கப்படும். காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் குழந்தை நல்ல மாவட்டம் உன் இடையீட்டு மையங்கள் 7.7 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

புதிய கட்டடங்கள்

உளுந்தூர்பேட்டை, ஓசூர், ஜெயம்கொண்டம், பொள்ளாச்சி மற்றும் பட்டுகோட்டை ஆகிய 5 மாவட்ட மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை மையம் சேவைகளை மேம்படுத்த 17.7 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் சஞ்சீவராயன்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 100 படுக்கை வசதியுடன் 8 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அதிக பாதுகாப்புக்கு உள்ளாகும் நபர்களுக்கு ஹெப்படைட்டிஸ் b&c வைரஸை கண்டறிந்து அவர்களுக்கு 8.19 கோடி ரூபாய் செலவில் சிகிச்சை வழங்கப்படும்.

12 அரசு மருத்துவமனைகளில் 105 டிஎன்பி உயர் மருத்துவ பட்டய படிப்புகள் 8.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். அனைத்து மருத்துவ துறை பணியாளர்களுக்கு கோவில் பெருந்தோட்ட தொடர்பான தகவல் தொழில்நுட்ப மேலாண்மை பயிற்சிகள் 9.23 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

108 அவசர கால ஊர்தி சேவை யை மேலும் வலுப்படுத்த 69.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக 188 புதிய வாகனங்கள் வழங்கப்படும். பெருநகர சென்னை மாநகராட்சியில் 13 புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 9.5 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும். வீடற்ற மக்களின் மன நலம் காக்கும் திட்ட வரைவு உலக மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மனநல ஆராய்ச்சி பல்கலைக்கழகம் மனநல வல்லுநர்கள் உதவியுடன் உருவாக்கப்படும்.

தனி சிகிச்சை பிரிவு

தமிழ்நாட்டின் தற்கொலை முயற்சிகளை தடுப்பதற்காக தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தற்கொலை தடுப்பு ஆலோசனை பயிற்சிகள் வழங்கப்படும். முதியோர் மனநலம் காக்க அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் முதியோர் மறதி நோய்க்கான தனி சிகிச்சை பிரிவு தொடங்கப்படும். கிராமப்புற சுகாதார சேவையை மேம்படுத்த புதிதாக 2,400 செவிலியர்கள் மற்றும் 2,448 சுகாதார ஆய்வாளர்கள் 17. 42 கோடி ரூபாய் செலவில் நியமனம் செய்யப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களின் நலனை பாதுகாக்க மக்கள் நல பதிவு என்னும் சுகாதார தகவல் இயங்கு தளம் உருவாக்கப்படும். உசிலம்பட்டி மற்றும் பெரம்பலூர் மாவட்ட மருத்துவமனைகளுக்கு இதயநோய் பரிசோதனைக்காக இயக்கக் கருவிகள் 25.50 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும். கர்ப்பப்பை, வாய் புற்றுநோய் கண்டறியும் மேக்னாவிசன் உபகரணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு 42 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும். 38 அரசு மருத்துவமனைகளுக்கு நுரையீரல் செயல்பாட்டை நோய் கண்டறியும் ஸ்பைரோ மீட்டர் கருவியால் 56.62 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

15 அரசு மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கி மற்றும் ரத்த சேமிப்பு நிலையங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் 5 புதிய ரத்த சேமிப்பு மையங்கள் ஏற்படுத்த 1.15 கோடி ரூபாய் செலவிடப்படும். 11 மாநகராட்சிகளில் மருத்துவம் சார்ந்த தகவல்கள் ஜிஐஎஸ் செயலி மூலம் 71 லட்சம் ரூபாய் செலவில் கணினி மயமாக்கப்படும். 1869 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த பிறப்பு இறப்பு பதிவேடுகளை 75 லட்சம் ரூபாய் செலவில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

மரபணு நோய்க்கான சிகிச்சை மைய கட்டடம்

மலைவாழ் மக்களிடையே காணப்படும் மரபணு நோய்க்கான சிகிச்சை மைய கட்டடம் தர்மபரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும். மாவட்ட மனநல திட்டம் 75 லட்சம் ரூபாய் செலவில் 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனைக்காக 10 அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் சென்னை பெருநகர மாநகராட்சி 1.10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

1,686 துணை சுகாதார நிலையங்களுக்கு ரத்த அழுத்தத்தை கண்டறியும் கருவிகள் 1.16 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். கர்ப்பிணி தாய்மார்களுக்கு யோகா பயிற்சிகள் 1.19 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். தாய்ப்பால் வங்கிகள் 12 அரசு மருத்துவமனைகளில் 1.20 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும். 19 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களுக்கு நவீன கருவிகள் 1.27 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

ஒருங்கிணைந்த நச்சு மேலாண்மை ஒப்புயர்வு மையங்கள் பொள்ளாச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்படும். ஆறு மாவட்டங்களில் புதிதாக மாவட்ட பொது சுகாதார ஆய்வகங்கள் 1.27 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும். 24 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு படுக்கை வசதியுடன் கூடிய மின்கல ஊர்தி பேட்டரி கார் 1.30 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் குடியிருப்பு 1.32 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களை கண்டறியும் பயிற்சிகள் தென்காசி, பெரம்பலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 1.76 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். ரத்த சேகரிப்பு பைகளை கண்காணிக்க இரண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு கதிரியக்க அலைவிச்சு கருவி 2.08 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு

சிறப்புக் குழந்தைகளுக்கான உணர்திறன் சிகிச்சை பூங்கா 2.64 கோடி ரூபாய் செலவில் 16 மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்படும். தூத்துக்குடி, கன்னியாகுமரி, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருவள்ளூர், வேலூர், தர்மபுரி ஆகிய 10 மாவட்டங்களில் புகையிலை கட்டுப்பாட்டு மையங்கள் 2.35 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும். சிறப்பு பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு புதிதாக ஐந்து மருத்துவமனைகளிலும் வெளி மருத்துவமனைகளில் இருந்து வரும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு 2 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 3.84 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

பிரத்தியேக ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அலகு சிகிச்சை மையம் சென்னை எழும்பூர் அரசு சிறார் நல நிலையம் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் 2.56 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். வேலூர் மற்றும் ஆவடி மாநகராட்சிகளில் 30 படுக்கை வசதி கொண்ட சமுதாய நல மையங்கள் தலா 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

40 டயாலிசிஸ் புதிய கருவிகள் 2.60 கோடி ரூபாய் செலவில் அரசு மக்களுக்கு வழங்கப்படும். 7 மாவட்டங்களில் காசநோய் அறிகுறிகள் குறித்த கணக்கெடுப்பு மற்றும் மூன்று மாவட்டங்களில் இக்ரா பரிசோதனை மூலம் காச நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்க 3.85 கோடி ரூபாய் செலவிடப்படும். காச நோய் இல்லா தமிழ்நாட்டை உருவாக்க தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் விவரங்கள் அரசுக்கு தெரிவிக்கும் வகையில் ஊக்கப்படுத்த 7.16 கோடி ரூபாய் செலவிடப்படும்.

கரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு நடமாடும் கண்சிகிச்சை வாகனங்கள் 1.50 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் 125 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சேமிப்புக் கலன் 2.25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். முதுகுத்தண்டு பாதிப்பு மற்றும் இதர நோய்களால் படுக்கையுடன் ஏற்படும் உடல் புண் சிகிச்சைக்காக அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 10 பிரத்தியோக படுக்கைகளுடன் தனி சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படும்.

சூரிய ஒளி மின்சாரம்

எச்ஐவி, எய்ட்ஸ் தடுப்பு ஆதரவு பராமரிப்பு மற்றும் சிகிச்சைக்காக நடப்பு நிதியாண்டில் 128.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்தியாவிலேயே முதல் முறையாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகாமையில் ஏற்படுத்தப்படும். அழுகிவரும் நிலையில் உள்ள மருத்துவ தாவரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் செங்கல்பட்டு - ஆலத்தூர் டாம் கால் நிறுவனத்திற்கு 70 லட்சம் ரூபாய் செலவில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்படும்.

120 இந்திய மருத்துவ முறை மருந்தகங்கள் இந்திய மருத்துவ முறை சுகாதார நல்வாழ்வு வைரங்களாக 32 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும். மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் இந்திய முறை மருத்துவ மருந்துகளும் வழங்கப்படும். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் தரவு அழகு (data cell) ஏற்படுத்தப்படும்.

முதியோர் நலனுக்காக சித்தர் நிறை வாழ்வு மையம் 3.25 கோடி செலவில் 100 சுகாதார நிலையங்களில் ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு மாநில சுகாதார போக்குவரத்து துறையில் வாகன ஒருங்கிணைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். வேலூர் மாவட்டம் காட்பாடியில் 60 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை அமைக்கப்படும். செங்கல்பட்டு, தென்காசி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு இணை இயக்குநர் நலப்பணிகள் பணியிடங்கள் 1.11 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் 20% இடஒதுக்கீடு

Last Updated : Sep 2, 2021, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.