ETV Bharat / state

'மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் அடுத்த வாரம் தொடக்கம்' - etv bharat

அடுத்த வாரம் கிருஷ்ணகிரியில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைக்கிறார் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம் விரைவில் தொடக்கம்

author img

By

Published : Jul 29, 2021, 5:37 PM IST

சென்னை: தண்டையார்பேட்டை மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவமனையில் அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையத்தை அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் திறந்துவைத்தனர். பின்னர் ஆதரவற்றோர் மன நோயாளிகளுக்கான மீட்பு வாகனத்தை அமைச்சர்கள் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர்.

இதனையடுத்து தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர். மேலும், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கே.என். நேரு கூறியதாவது, "சென்னையில் 30 லட்சத்து 75 ஆயிரத்து 292 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 13 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக ஒன்றிய அரசு வழங்கி உள்ளது.

ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் தற்போது தேவையான அளவு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதத்திற்குள் நடைபெறும்" என்றார்.

அவரைத் தொடர்ந்து மா. சுப்பிரமணியன் பேசுகையில், "அதிமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை எத்தனை நிறைவேற்றி உள்ளனர் என்று ஓபிஎஸ் இபிஎஸ் தெளிவுப்படுத்த வேண்டும். மூன்று மாதம்கூட முழுமையடையாத அரசு செய்துள்ள நடவடிக்கைகளை மக்களே அறிவர்.

10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து செய்யாததை இரண்டு மாதமே ஆகியுள்ள அரசு செய்ய வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் சரியாக இருக்கும். சென்னையில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் கூடுதலாக மேற்கொள்ளப்படுவதால்தான் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை சற்று அதிகமாக வருகிறது.

மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் விரைவில் தொடக்கம்

அடுத்த வாரம் கிருஷ்ணகிரியில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைக்கிறார். மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்திற்காக கூடுதலாக 1,000 செவிலியரை நியமனம் செய்ய உள்ளோம். அம்மா கிளினிக் மூலம் எந்த அடித்தட்டு மக்கள் பயன்பெற்றார்கள், பெயரளவுக்கு மட்டுமே அம்மா கிளினிக் இருந்தது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் - மகேஷ் பொய்யாமொழி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.