ETV Bharat / state

இரட்டை குழந்தை விவகாரம்... நாளை மாலை அறிக்கை... மா.சுப்பிரமணியன் தகவல்...

author img

By

Published : Oct 25, 2022, 2:26 PM IST

நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக நாளை மாலை அறிக்கை வெளியிடப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

minister-ma-subramanian-on-nayanthara-vignesh-shivan-twins-controversy

சென்னை: நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் ஜூன் மாதம் திருமணம் நடந்தது. 4 மாதங்களில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தததாக விக்னேஷ் சிவன் அறிவித்தார். இதுதொடர்பான புகைப்படத்தையும் இருவரும் வெளியிட்டிருந்தனர். அதன்பின் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது தெரியவந்தது. அதேசமயம் விதிமுறைகளை மீறி அவர்கள் குழந்தை பெற்றதாக சர்ச்சையும் எழுந்தது.

இந்த வாடகைத்தாய் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். வாடகைத்தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீக்காயப் பிரிவினை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதன்பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது குறித்து பல்வேறுத் துறைகள் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். தீபாவளிப் பண்டிக்கைக்கு தீக்காயம் ஏற்பட்டால் முன்பு கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த தீபாவளிப் பண்டிகைக்கு தமிழ்நாட்டில் உள்ள 38 அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும் 10 படுக்கை கொண்டு சிறப்பு வார்டுகள் பயன்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் பல்வேறுப் பகுதிகளில் 180 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துகள் குறைவாக இருந்தாலும், இதுவும் இருக்க கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பட்டாசு வெடித்ததால் 17 சதவீதம் அளவிற்கு மட்டுமே அதிகபட்சமாக பாதிப்பு இருக்கிறது. இதனால் உயிரிழப்பு இருக்காது. சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது வருத்தமாக உள்ளது. ஆந்திரா, தெலுங்கானவில் இருந்தும் குழந்தைகள் காயங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ள ஒருவருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்ற விவாகாரம் குறித்த அறிக்கை நாளை மாலை வெளியிடப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தலை தீபாவளியை குழந்தைகளுடன் கொண்டாடிய விக்கி, நயன் தம்பதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.