சென்னை: தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக இருந்த எல். முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்றிய தகவல், ஒளிபரப்புத் துறை இணை அமைச்சராகப் பெறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து தமிழ்த் திரைத்துறையில் நிலவும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து திரைத் துறையின் முக்கிய நிர்வாகிகள் அவரிடம் கோரிக்கைவைத்து-வந்தனர்.
இதனையடுத்து அக்டோபர் 8ஆம் தேதி தமிழ்த் திரைத் துறையைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் எல். முருகன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள், பிலிம்சேம்பர் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். அப்போது ஜிஎஸ்டி, ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: திருக்குறள் புத்தகத்துடன் பிரதமரை சந்தித்த அமைச்சர் எல்.முருகன்