ETV Bharat / state

பெருங்குடி குப்பை கிடங்கில் தீ - அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு - பெருங்குடி குப்பை கிடங்கில் தீ

சென்னை பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார். இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க 4 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பெருங்குடி குப்பை கிடங்கில் தீ - அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு
பெருங்குடி குப்பை கிடங்கில் தீ - அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு minister-kn-nehru-inspected-fire-extinguishing-work-at-perungudi-garbage-dumpபெருங்குடி குப்பை கிடங்கில் தீ - அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு
author img

By

Published : Apr 29, 2022, 12:28 PM IST

Updated : Apr 29, 2022, 12:41 PM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று (ஏப்ரல்.28) ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகம் 225 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 9 முதல் 15 மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு எஞ்சிய குப்பைகள் இங்கு சேகரிக்கப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்தக் குப்பைக் கொட்டும் வளாகத்தில் உள்ள திடக்கழிவுகள் தற்பொழுது பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும்.

பெருங்குடி குப்பை கிடங்கில் தீ - அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு
பெருங்குடி குப்பை கிடங்கில் தீ - அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு

பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தில் தீப்பற்றியவுடன் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுத் தீயணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சி, தீயணைப்புத் துறை மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

தீயணைப்புத் துறையின் சார்பில் 12 வாகனங்கள், 2 ஸ்கை லிஃப்ட் வாகனங்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் 120க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்பொழுது, தீயின் காரணமாகப் புகை மூட்டம் காணப்படுகிறது. இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கப் பெருங்குடி, வேளச்சேரி, மடிப்பாக்கம் மற்றும் தரமணி ஆகிய 4 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப இம்மருத்துவ முகாம்கள் மேலும் அதிகரிக்கப்படும்" என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், சென்னை மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மு.மகேஷ் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: பேரூராட்சிகளில் சீரான குடிநீர் விநியோகம் - அமைச்சர் கே.என் நேரு

Last Updated : Apr 29, 2022, 12:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.