சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த சர்வதேச திரைப்பட விழா தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், 2020ஆம் ஆண்டு சென்னையில் நடைபெறும் 18ஆவது சர்வதேச திரைப்பட விழாவிற்கு அரசு தரப்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவதற்க்கான நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டும் நடக்கும் கோவா சர்வதேச விழாவில் தமிழ் திரைப்படங்கள் அதிகமாக திரையிடப்பட வேண்டும் என்றும் அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வருகின்ற ஜனவரி மாதத்திற்குள் திரையரங்குகளில் இணையவழியில் முன்பதிவு கட்டணத்தின் வரன்முறை இறுதி செய்யப்படும். இதே போன்று டிக்கெட் முன்பதிவிற்கு தமிழ்நாடு அரசின் செயலி அறிமுகபடுத்தப்படும் என்று உறுதியளித்தார்.
பிறகு, சென்னை கவின் கலை கல்லூரி பராமரிப்பின்றி கிடப்பதாக தெரிவித்த பா.ரஞ்சித்தின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, கலைக்கல்லூரியின் கட்டடங்கள் புனரமைப்பதற்கு அந்த துறை அமைச்சகம் மற்றும் முதலமைச்சரிடம் பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும் எனக் கூறினார்.
மேலும், இதுவரை தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்ட விருது வழங்கவில்லை என்று நடிகர் சித்தார்த்தின் குற்றச்சாட்டிற்கு பதில் கூறொய அமைச்சர், கலை துறையினருக்கு வழங்கவுள்ள தமிழ்நாடு அரசு விருதுகள் விரைவில் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட நடைபாதை கடைகள் அகற்றம்
!