ETV Bharat / state

'வேலையில்லாவிட்டால் ஆசிரியர்கள் வெளியேற்றப்படுவார்கள்...!'

சென்னை: ஆசிரியர்களுக்கு வேலை இல்லாவிட்டால் வெளியேற்றப்படுவார்கள் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

minister
author img

By

Published : Aug 6, 2019, 4:24 PM IST

Updated : Aug 6, 2019, 5:00 PM IST

உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், பி. ஆர்க் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு இடங்களை தேர்வு செய்த மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் பாதுகாப்புப் படையினரின் வாரிசுகளுக்கு ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. அன்பழகன், "பி. ஆர்க் பொறியியல் படிப்பிற்கான அரசு ஒதுக்கீட்டில் ஆயிரத்து 700 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 110 இடங்களும் என ஆயிரத்து 810 இடங்கள் 51 நிரப்பப்பட உள்ளன. அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 90 இடங்களும், முன்னாள் பாதுகாப்புப் படையினரின் வாரிசுகளுக்கு 20 இடங்களும், விளையாட்டு வீரர்களுக்கு 44 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கலந்தாய்வு வருகின்ற ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் ஆசிரியர்-மாணவர் விகிதம் இந்தாண்டு ஒரு ஆசிரியருக்கு 20 மாணவர்கள் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் உபரி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. அரசு பொறியியல் கல்லூரிகளில் 31 ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. அதற்காகவே, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து ஆசிரியர்களைப் பணியிட மாற்றம் செய்து வருகிறோம்.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஒரு ஆசிரியருக்கு 20 மாணவர்கள் என்ற விகிதத்தில் இருந்தால் எந்தவித பிரச்னையும் இல்லை. அப்படி இல்லாமல் ஆசிரியர்கள் உபரியாக இருந்தால் அவர்களை வேறு பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆசிரியர்களுக்கு வேலையில்லை என்றால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

பொறியியல் படிப்பில் 29 ஆயிரத்து 92 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், அரசு ஒதுக்கீட்டுக்காக அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் அரசு மாணவர்களை நிரப்பித் தருகிறது. அதன் பின்னரும் கல்லூரியில் மாணவர்கள் சேரவில்லை என்றால் சுயநிதி கல்லூரிகளை நடத்துவது குறித்து அதன் நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும். அரசு எதுவும் செய்ய முடியாது" எனத் தெரிவித்தார்.

Intro:ஆசிரியர்களுக்கு வேலை இல்லா விட்டால் வெளியேற்ற தான் செய்வார்கள்
அமைச்சர் கே. பி. அன்பழகன் அதிரடி பேட்டிBody:சென்னை,
பி .ஆர்க் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு இடங்களை தேர்வு செய்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு ஒதுக்கீட்டு ஆணையை உயர் கல்வி துறை அமைச்சர் கே. பி. அன்பழகன் வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்,பி.ஆர்க் சேர்க்கைக்கான அறிவிப்பு ஜூலை மாதம் 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள 2,249 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியான ஆயிரத்து 827 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள தர வரிசை அடிப்படையில் அழைக்கப்பட்டுள்ளனர்.

பி.ஆர்க் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 1700 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 110 இடங்களும் என 1810 இடங்கள் 51 பி.ஆர்க் கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கு 90 இடங்களும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 20 இடங்களும் விளையாட்டு வீரர்களுக்கு 44 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கலந்தாய்வு எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.
பி ஆர்க் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நாட்டா நுழைவுத்தேர்வு ஏற்கனவே இரண்டு முறை நடத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடத்தினை தேர்வு செய்து சேர்ந்து வருகின்றனர்.

பொறியியல் படிப்பில் சேருவதற்காக ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் சான்றிதழ் சரிபார்ப்பில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 330 மாணவர்கள் கலந்து கொண்டனர். பொறியியல் படிப்பில் சேருவதற்கு நடத்தப்பட்ட கலந்தாய்வில் 101 மாற்றுத்திறனாளிகளும்,130 முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளும் ,330 விளையாட்டு வீரர்களும், 1122 தொழில்கல்வி மாணவர்கள் இடங்களை தேர்வு செய்தனர். அதேபோல் பொது கலந்தாய்வின் மூலம் 76 ஆயிரத்து 364 மாணவர்களும், துணைக் கலந்தாய்வில் 4548 மாணவர்களும் இடங்களை தேர்வு செய்தனர். கலந்தாய்விற்கு பணம் செலுத்தி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை உறுதி செய்யாத மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு வாய்ப்பின் மூலம் 801 மாணவர்கள் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். பொறியியல் படிப்பில் 83 ஆயிரத்து 396 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இடங்களை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆயிரத்து 147 மாணவர்கள் கூடுதலாக தேர்வு செய்துள்ளனர்.

காலியிடங்கள் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு முடிந்த பின்னர் பொறியியல் படிப்பிற்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. பொறியியல் படிப்பில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு அளிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பின்னர் எத்தனை இடங்கள் காலியாக உள்ளது என்பது தெரியவரும்.

பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தால் கடந்த ஆண்டு ஒரு ஆசிரியர்களுக்கு 15 மாணவர்கள் என இருந்தது. ஆனால் இந்தாண்டு ஒரு ஆசிரியருக்கு 20 மாணவர்கள் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் உபரி ஆசிரியர்கள் இருந்தால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. அரசு பொறியியல் கல்லூரிகளில் அது போன்ற நிலை இல்லை. 31 ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. அதற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்து நியமனம் செய்து வருகிறோம். சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஒரு ஆசிரியருக்கு 20 மாணவர்கள் என்ற விகிதத்தில் இருந்தால் எந்தவித பிரச்சினையும் இல்லை. அப்படி இல்லாமல் ஆசிரியர்கள் உபரியாக இருந்தால் அவர்களை வேறு பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆசிரியர்களுக்கு வேலை இல்லை என்றால் அவர்களை வெளியேற்ற தான் செய்வார்கள்.
பொறியியல் படிப்பில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 29 ஆயிரத்து 92 அரசு ஒதுக்கீட்டு இடத்திற்கு அளிக்கப்பட்டது. அதிலும் அரசு மாணவர்களை நிரப்பித் தருகிறது. அதன் பின்னரும் கல்லூரியில் மாணவர்கள் சேரவில்லை என்றால் சுயநிதி கல்லூரிகளை நடத்துவது குறித்து அதன் நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். அரசு எதுவும் செய்ய முடியாது என தெரிவித்தார் .

Conclusion:
Last Updated : Aug 6, 2019, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.