ETV Bharat / state

'ஜெயலலிதா குறித்து பேசினால்...திமுக தலைவர்கள் குறித்து பேசுவோம்'- ஜெயக்குமார் எச்சரிக்கை! - ஆ ராசா ஆத்தா சர்ச்சை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து திமுகவினர் தொடர்ந்து பேசினால், திமுக தலைவர்கள் குறித்துப் பேசவேண்டியது வரும் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

minister jeyakumar warned dmk
'ஜெயலலிதா குறித்து பேசினால்...திமுக தலைவர்கள் குறித்துப் பேசுவோம்'- ஜெயக்குமார் எச்சரிக்கை!
author img

By

Published : Dec 7, 2020, 4:36 PM IST

சென்னை: கடந்த வாரம் நந்தனத்தில், 12 கி. மீ நிற்காமல் ஓடி சாதனை படைத்த 2ஆம் வகுப்பு படிக்கும் சுதன் எனும் சிறுவனை ஊக்கப்படுத்தும் வகையில் அவருக்கு 50ஆயிரம் ரூபாயை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சருக்கு கலெக்ஷன், கரப்ஷன் நாயகன் என்ற பட்டம் அளிப்பதாக தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "கலெக்ஷன், கரப்ஷன் சொல்லாடல் உருவானதே திமுக ஆட்சியில்தான், சர்க்கரை பேர ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை செய்ததால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

'ஜெயலலிதா குறித்து பேசினால்...திமுக தலைவர்கள் குறித்துப் பேசுவோம்'- ஜெயக்குமார் எச்சரிக்கை

திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அனைவரின் மீதும் ஊழல் வழக்குகள் உள்ளன. அவர்கள், விரைவில் சிறைக்கு செல்வார்கள். தமிழ்நாட்டை முழுமையாக ஊழல் மயமாக்கியது திமுகதான். தற்போது, தமிழ்நாட்டில் சிறப்பான வெளிப்படையான ஊழலற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. 2ஜி ஊழலை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தோலுரித்துக் காட்டினார்.

தமிழர்களின் அவமான சின்னமாக 2ஜி ஊழல் ஆ.ராசா இருக்கிறார். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த நிலங்களை சூறையாடிய கட்சி திமுகதான். ஆ.ராசா ஓட்டைச சைக்கிளில் சென்றவர். தற்போது, ஒரு லட்சம் கோடி சொத்து சேர்த்துள்ளார். தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்துப் பேசினால் திமுகவின் அனைத்து தலைவர்கள் குறித்தும் நாங்கள் பேசுவோம். இனி எப்போதும் திமுக ஆட்சிக்கு வரமுடியாது. 2010ஆம் ஆண்டே திமுகவுக்கு முடிவு காலம் வந்துவிட்டது" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் இரும்பு பெண்மணி- ‘ஜெ’வின் பாதை ஒன்றும் அவ்வளவு எளிதல்ல!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.