இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “ஜிஎஸ்டி 39ஆவது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் தலைமையில் டெல்லியில் நடைபெறவுள்ளது. மாநில அரசின் சார்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவிக்க இருக்கிறோம்.
போலியான ரசீது கொடுத்து ஏமாற்றுகின்ற செயலில் வணிக வளாகங்கள் ஈடுபட்டால், அது சட்டப்படி குற்றம். 292 சரக்கு மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. 24 சரக்கு மீதான வரிகள் முற்றிலும் விளக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சார்பாக 62 சேவை வரி குறைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள், வணிகர்கள் பாதிக்கின்ற எந்த ஒரு செயலாக இருந்தாலும் நிச்சயமாக ஜிஎஸ்டி கவுன்சிலில் அதற்கான எதிர்ப்பை நாங்கள் தெரிவிப்போம். எங்களைப் பொறுத்த வரையில் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா இவர்கள் அனைவரும் மிகப் பெரிய சக்திகள். அந்த சக்திகளை வைத்துதான் மக்களை சந்திப்போம்.
2011, 2016ஆம் ஆண்டையடுத்து 2021ஆம் ஆண்டிலும் தொடர்ந்து அதிமுக மக்களுக்கான ஆட்சியை நிலைநிறுத்தும். எங்களைப் பொறுத்தவரையில் மக்கள் செல்வாக்கு பெற்ற, மக்கள் எதிர்பார்க்கின்ற அனைத்தையும் நிறைவேற்றுகின்ற அரசு என்றால், அது எங்களுடைய அரசுதான்” எனத் தெரிவித்தார்.
தொடந்து பேசிய அவர், வயலில் ஷூ போட்டு நடந்தவர் ஸ்டாலின், வெறும் காலில் நடந்தவர் முதலமைச்சர் பழனிசாமி என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் என்பிஆர் கணக்கெடுப்பு நிறுத்தி வைப்பு - அமைச்சர் உதயகுமார்