ETV Bharat / state

துரைமுருகன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

காவிரி நதிநீர்ப் பிரச்னையில் திமுக இழைத்த துரோகத்தை மறைக்கவே, துரைமுருகன் உண்மைக்கு புறம்பான தகவல்களைக் கூறி வருகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

jeyakumar
author img

By

Published : Nov 17, 2019, 1:47 PM IST

'நதிநீர்ப் பங்கீடு குறித்து வழக்குகளில் அரசுக்கு ஆர்வமில்லை' என குற்றஞ்சாட்டிய திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

  • 'தமிழ்நாட்டில் திமுக ஆட்சியிலிருந்தபோது பல காலம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், அரசு நதிநீர்ப் பங்கீட்டு உரிமைகளில் அக்கறை காட்டுவதில்லை என்று குறை கூறியுள்ளது விந்தையாக உள்ளது.
  • நதிநீர்ப் பிரச்னைகளில் திமுகவின் துரோகங்களை நான் ஏற்கெனவே பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன்.
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சத்தை முழுமையாகப் படிக்காமலும், தமிழ்நாடு அரசு தொடர்ந்த அசல் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதை அரசியல் காரணங்களுக்காக மறைத்தும் கூறுவதையே துரைமுருகன் வாடிக்கையாகக் கொண்டுள்ளதை மக்கள் நன்கறிவர்.
  • காவிரி நதிநீர்ப் பிரச்னையில் திமுக இழைத்த துரோகத்தை மறைக்கவே துரைமுருகன், உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறிவருகிறார்.
  • காவிரி நதி நீர்ப் பிரச்னை ஆகட்டும், முல்லைப் பெரியாறு பிரச்னை ஆகட்டும், திமுக ஆட்சி காலத்தில் எந்த விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
  • பங்கீடு குறித்து அவரது அனுபவத்தைக் கொண்டு தனது அறிக்கையில் அது பற்றி தெரிவித்துள்ளார். தனது பங்கீடு அனுபவத்தை வேலூர் மக்களவைத் தேர்தலில் செயல்படுத்தியதால் தான், வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்து, தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதும் இந்த நாட்டிற்கே தெரியும்.
  • அதிமுக அரசு தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும் தொடர்ந்து செயல்படும். பெண்ணையாறு நதிநீர்ப் பிரச்னையிலும் தொடர்ந்து சட்டப் போராட்டம் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும்' என்று அமைச்சர் ஜெயக்குமார் துரைமுருகனுக்கு பதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: திமுகவை யாராலும் அழிக்க முடியாது - திமுக பொருளாளர் துரைமுருகன்

Intro:
பெண்ணையாறு நதிநீர் பிரச்சனையிலும்
தமிழ்நாட்டின் உரிமை நிலை நாட்டப்படும்
துரை முருகனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் Body:

பெண்ணையாறு நதிநீர் பிரச்சனையிலும்
தமிழ்நாட்டின் உரிமை நிலை நாட்டப்படும்
துரை முருகனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

சென்னை,

பெண்ணையாறு நதிநீர் பிரச்சனையிலும் தொடர்ந்து சட்டப் போராட்டம் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் திமுக பொருளாாளர் துரைமுருகனுக்கு பதிலளித்துள்ளார்.

இது குறித்து மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியிலிருந்தபோது பல காலம் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் அரசு நதிநீர் பங்கீட்டு உரிமைகளில் அக்கறை காட்டுவதில்லை என்று குறை கூறியுள்ளது விந்தையாக உள்ளது.
நதிநீர் பிரச்சனைகளில் தி.மு.க.வின் துரோகங்களை நான் ஏற்கெனவே பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன்.
பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணைகள், நீரைத் திருப்புவதற்கான கட்டுமானங்கள் போன்றவற்றை 1892 ம் ஆண்டு மதராஸ்-மைசூர் ஒப்பந்தத்தை மீறும் வகையிலும், அந்த ஒப்பந்த ஷரத்துப்படி தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறாமலும் கட்டத் துவங்கிய போது தமிழ்நாடு அரசு அதன் மறுப்புகளை மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் தொடர்ந்து தெரிவித்து, மத்திய அரசு இந்தப் பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
கர்நாடக அரசிடமிருந்தும், மத்திய அரசிடமிருந்தும் சாதகமான பதில் வரப்பெறாத நிலையில், தமிழ்நாடு அரசு கர்நாடகாவின் இத்தகைய நடவடிக்கைகள் மதராஸ்-மைசூர் ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் . தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் . இயற்கையாக ஓடுகின்ற நீரினை கர்நாடக அரசு எவ்வித கட்டுமானத்தின் மூலமாக தடுத்து நிறுத்தக் கூடாது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 18.5.2018 அன்று ஓர் இடைக்கால மனுவுடன் கூடிய சிவில் வழக்கினை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது.

கர்நாடக அரசு, மார்கண்டேய நதியில் அணை கட்டுவதற்காக கட்டுமானப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டதால், அதனை தடுத்து நிறுத்தக் கோரி 3.7.2019 அன்று ஓர் இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இடைக்கால மனு மீது உச்சநீதிமன்றம் 14.11.2019 அன்று வழங்கிய தீர்ப்பில், தமிழ்நாட்டின் இடைக்கால மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை என உத்தரவிட்டுள்ளதுடன், இப்பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு நடுவர் மன்றத்தை அமைக்க மத்திய அரசை 4 வார காலத்திற்குள் அணுக வேண்டும் என கூறியுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் சாராம்சத்தை முழுமையாக படிக்காமலும், தமிழ்நாடு அரசு தொடர்ந்த அசல் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதை அரசியல் காரணங்களுக்காக மறைத்தும் கூறுவதையே துரைமுருகன் வாடிக்கையாக கொண்டுள்ளதை மக்கள் நன்கறிவர். இந்த அசல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் தான் உள்ளது. இதன் அடுத்த கட்ட விசாரணை 10.1.2020 அன்று எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
உச்சநீதிமன்றம் தென்பெண்ணையாறு பிரச்சனையில் 14.11.2019 அன்று வழங்கிய தீர்ப்பின் மீது சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. சட்டப்பூர்வமான ஆலோசனை பெறப்பட்டவுடன் பெண்ணையாற்று நீரினை சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை பாதுகாக்கவும் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும்.

காவேரி நடுவர்மன்றம் 5.2.2007 அன்று இறுதி தீர்ப்பினை வழங்கியபோது அதனை மத்திய அரசிதழில் வெளியிடுவதற்கு 2011 மே மாதம் வரை சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளும், இன்னல்களும் ஏராளம்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு காவேரி நீர்மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை 1.6.2018 அன்று அரசிதழில் வெளியிட்டது. இந்த இரு அமைப்புகளின் செயல்பாடுகள் காவேரி நடுவர்மன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன. காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் தி.மு.க. இழைத்த துரோகத்தை மறைக்கவே துரைமுருகன் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருகிறார்.
         இவ்வாறு காவேரி நதிநீர் பிரச்சனை ஆகட்டும், முல்லைப் பெரியாறு பிரச்சனை ஆகட்டும், திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கவும் எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை . தங்கள் சொந்த நலன்களுக்கும் பலன்களுக்கும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டனர் .
          துரைமுருகன் பலஆண்டுகள் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்ததாலோ என்னவோ பங்கீடு குறித்து அவரது அனுபவத்தைக் கொண்டு தனது அறிக்கையில் அது பற்றி தெரிவித்துள்ளார். தனது பங்கீடு அனுபவத்தை வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் செயல்படுத்தியதால் தான், வருமான வரித் துறையினர் நடவடிக்கை எடுத்ததால், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதும் இந்த நாட்டிற்கே தெரியும்.
         நதிநீர்ப் பங்கீட்டு பிரச்சனைகளில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் உறுதியுடன் செயல்படும் இந்த அரசு தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும் தொடர்ந்து செயல்படும். பெண்ணையாறு நதிநீர் பிரச்சனையிலும் தொடர்ந்து சட்டப் போராட்டம் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என அதில் கூறியுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.