ETV Bharat / state

திமுக ஊழலின் மொத்த உருவம் - அமைச்சர் ஜெயக்குமார் - jeyakumar

சென்னை: நாட்டில் யார் எதை பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது என்று ஊழல் பற்றி பேசிய எம்.பி தயாநிதி மாறனை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்
author img

By

Published : Jun 25, 2019, 7:18 PM IST

Updated : Jun 25, 2019, 7:32 PM IST

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் ஊழல் குறித்து பேசியுள்ளார். நாட்டில் யார் எதைப் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. சாத்தான் வேதம் ஓதுவது போல் அதிமுக மீது சேற்றை வாரி இறைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டதன் மூலம் நாடாளுமன்றத்தில் மரபை மீறியதால் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.

இவர் வரலாற்றை சற்று திரும்பிப் பார்க்க வேண்டும், இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி. மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், அதிமுக ஊழல் கட்சி என நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். இதைக் கூறும் முன்பு அவர் நாடாளுமன்றத் தேர்தலில் பணத்துக்காக எந்தத் தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே உத்தமர்கள் போல் இவர்கள் பேசுவதை நாட்டு மக்கள் யாரும் நம்பமாட்டார்கள். ஆகவே ஊழலின் மொத்த உருவமாக திமுக உள்ளது.

அமைச்சர் ஜெயகுமார் ஜெய்க்குமார் செய்தியாளர் சந்திப்பு

மேலும் டிடிவி தினகரனின் கூடாரம் காலியாகி வருகிறது. சசிகலா-தினகரன் குடும்பத்தைத் தவிர மற்றவர்கள் யார் வந்தாலும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் சேர்த்துக் கொள்வார்கள் என்றார்.

Intro:ஊழலின் மொத்த உருவம் திமுக
அமைச்சர் ஜெயக்குமார் பேட்டிBody:சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளம் மற்றும் பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் தயாநிதி மாறன் ஊழல் குறித்து பேசியுள்ளார். நாட்டில் யார் எதைப் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது சாத்தான் வேதம் ஓதுவது போல் அதிமுக மீது சேற்றை வாரி இறைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு அதன் மூலம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் மரபின் மீறியதால் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.

இவர் வரலாற்றை சற்று திரும்பிப் பார்க்க வேண்டும் இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி. பழைய வீராணம் திட்டம் அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதியால் கொண்டுவரப்பட்டு அதில் குழாய் பாதிப்புகள் செய்து சத்யநாராயணன் என்ற காண்ட்ராக்டர் எப்படி எல்லாம் இருந்தார் என்பதை மறந்து விடக்கூடாது.
பூச்சி மருந்து ஊழல் விவசாய இடுபொருட்கள் வாங்கியதில் ஊழல் சர்க்கரை பேர ஊழல் என ஊழலின் மொத்த உருவம் திமுக. இந்த ஊழல்களை தொகுத்து எம்ஜிஆர் மத்திய அரசிடம் அளித்து அதன் அடிப்படையில் மத்திய அரசு சர்க்காரியா கமிஷன் அமைத்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி ஏற்படும் வகையில் ஊழலுக்காக திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
நாடாளுமன்றம் உறுப்பினர் தயாநிதி மாறன் அதிமுக ஊழல் கட்சி என நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் பணத்துக்காக எந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டது என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் மகன் போட்டியிட்ட வேலூர் தொகுதியில் தான் பணம் கொடுத்ததற்காக நாடாளுமன்ற தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே உத்தமர்கள் போல் இவர்கள் பேசுவதை நாட்டு மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள்.
தயாநிதிமாறன் டெலிபோன் எக்சேஞ்ச் ஊழலில் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் காவல்துறையை பயன்படுத்தி விசாரிக்க வேண்டி இருக்கும் என எச்சரித்து உள்ளதை நினைத்து பார்க்க வேண்டும்.
எனவே ஊழலின் மொத்த உருவமாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழக ஆட்சி வாயைத் திறந்து வாங்கி கட்டி கொண்டுள்ளது.
விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதில் திமுக கைதேர்ந்தவர்கள். அவர்கள் 100 ரூபாய்க்கு பார்க்க வேண்டிய பணத்தை 200 ரூபாய்க்கு மதிப்பீடு செய்து அதனை 180 ரூபாய்க்கு கட்டியதாக கணக்கு காண்பிப்பார்கள். இதுபோன்று ஊழல் செய்து சென்னையில் 7 க்கு மேற்பட்ட பாலங்களை கட்டி உள்ளனர். அதேபோல் ஆசியாவில் மிகப்பெரிய பணக்காரராக உள்ள தயாநிதிமாறனுக்கு சொத்துக்கள் எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்பினார்.
டிடிவி தினகரனின் கூடாரம் காலியாகி வருவதாகவும், சசிகலா தினகரன் குடும்பத்தை தவிர மற்றவர்கள் யார் வந்தாலும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர் சேர்த்துக் கொள்வார்கள் என தெரிவித்தார்.
மேலும் சென்னைக்கு தேவையான குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், நிலத்தடி நீரினை விதிகளை மீறி யார் எடுத்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
Conclusion:
Last Updated : Jun 25, 2019, 7:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.