அதிமுகவின் பரப்புரைப் பொதுக்கூட்டம் தொடக்க விழா நாளை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
அதிமுக பொதுக்கூட்டம்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "எம்ஜிஆர், ஜெயலலிதா வீர வரலாற்றைப் படைத்தனர். இரட்டை இலையை மீட்டவர் ஜெயலலிதா. அதிமுக பொதுக்கூட்டம் ஒருங்கிணைப்பாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், கூட்டணி தலைவர்களை கொண்டு கூட்டம் நடத்துவது குறித்து கட்சித் தலைமை முடிவுசெய்யும்.
அதிமுக கூட்டணி
மக்களவைத் தேர்தல் கூட்டணியே அதிமுக தலைமையில்தான் அமைந்தது. எனவே சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணித் தலைமையும் அதிமுகதான். கூட்டணிக்கு முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான், இதை ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் கூட்டணியில் இருப்பார்கள்.
திமுக அவதூறு
வரும் தேர்தலில் பெரும்பான்மையோடு அதிமுக வெற்றிபெறும். அதிமுகவை நிராகரியுங்கள் என்பது திமுகவை நிராகரியுங்கள் என்றுதான் பொருள்படும். இனி திமுக தமிழ்நாட்டில் ஆட்சி நடத்த முடியாது. அவதூறுப் பரப்புரைகள் செய்தாலும் எடுபடாது.
பிரசாந்த் கிஷோருக்கு 400 கோடி ரூபாய் கொடுத்து வேலை செய்தாலும் காட்டாற்று வெள்ளம்போல அதிமுக ஆட்சியைப் பிடிக்கும். எம்ஜிஆர் வரலாறு பற்றி தெரியாமல் சீமான் பேசுகிறார். அவர் வாழும் வரலாறு, புரட்சித் தலைவரைத் தொட்டால் கெட்டான்” என்றார்.
இதையும் படிங்க: ’பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான்கள் திமுகவினர்’ - அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு