வரும் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர் யாரென்ற இழுபறியை அஇஅதிமுக கடந்து வந்துள்ள நிலையில், அக்கட்சியின் 49ஆவது தொடக்க விழா இன்று (அக்.17) ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டப்பட்டது.
இந்நிலையில், இவ்விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களை சந்தித்தார். அதில், ”தமிழ்நாடு வரலாற்றில் 48 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்துள்ளது அதிமுக. இந்த ஆட்சியை எந்தக் கொம்பனாலும் ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது” என்றார்.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”இது சமூக நீதிக்கான ஆட்சி, சமூக நீதி நிலைநாட்டப்படும். இது குறித்து சட்டத்துறை அமைச்சர் தெளிவாகக் கூறியுள்ளார், மேலும் 69 சதவிகித இடஒதுக்கீடு, நிதிப் பிரச்சினை ஆகியவை காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...புதிதாகப் பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு தேர்தல் அலுவலர்கள் அறிவிப்பு