சென்னை புரசைவாக்கத்தில் இரண்டு கோடி ரூபாய் செலவில் பம்பிங் ஸ்டேசன் அமைக்க மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், 'திமுகவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் காரணமாகவே தங்க.தமிழ்ச்செல்வனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவில் உள்ளவர்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகத்திற்குரியது. இந்த முடிவு ஸ்டாலினுடைய தனிப்பட்ட விருப்பம். கட்சியின் விருப்பமாக இருக்காது.
திமுகவின் நடவடிக்கைகள் தற்போது ஸ்டாலினின் 'ஒன் மேன் ஷோ'வாக இருக்கிறது. திமுகவில், உதயநிதியின் மகனுக்குக்கூட புதுப்பிரிவை உருவாக்கி தலைவர் ஆக்குவார்கள். மேலும், அதிமுகவிலிருந்து சென்றவர்களால் தான் திமுக செயல்படுகிறது' என்றும் விமர்சித்தார்.