சென்னை ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பாக அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுகிறார். தொடர்ந்து ஏழாவது முறையாகப் போட்டியிடும் இவர், இன்று (மார்ச் 15) ராயபுரம் மண்டல அலுவலகத்தில் தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "ஏழாவது முறையாக ராயபுரம் தொகுதி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறேன். இதில் ஐந்கு முறை வெற்றிபெற்றுள்ளேன். தமிழ்நாட்டில் குடிசை இல்லாத தொகுதியாகவும், தண்ணீர் தேங்காத தொகுதியாகவும், மின்தடை ஏற்படாத ஒரே தொகுதியாகவும் ராயபுரம் தொகுதியை மாற்றியுள்ளேன். இங்கிருக்கும் மக்களுக்கு எல்லாவிதமான அடிப்படை வசதிகளும் செய்துதரப்பட்டுள்ளன.
வடசென்னை மக்களுக்குச் சிறந்த சிகிச்சை கிடைப்பதற்காக, ஸ்டான்லி மருத்துவமனைக்கும், ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனைக்கும் அதிகப்படியான நிதி அரசிடமிருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டது.
கரோனா காலத்தில் திமுகவினர் யாரும் வந்து களப்பணியாற்றவில்லை. அச்சமயத்திலும் நாங்கள்தான் உயிரைப் பொருட்படுத்தாமல் பல இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி, களப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல்