ETV Bharat / state

'சமூக நல துறை பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில்' - கீதா ஜீவன்

author img

By

Published : Jul 9, 2021, 6:18 PM IST

சமூக நல துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

கீதா ஜீவன்
கீதா ஜீவன்

சென்னை: தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்

"தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதுவரை இத்திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பின்னரே புதிய பயனாளிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

காப்பகங்களுக்கு சீல்

சமூக நலத்துறையின் அனுமதி பெறாமல் செயல்பட்ட மூன்று காப்பகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காப்பகங்கள் செயல்பாடுகள் குறித்து சமூக நல துறையின் துணை இயக்குநர் தலைமையில் ஆய்வு நடத்தி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் தனி சேவை மையம்:

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க தனி சேவை மையம் தர்மபுரி, தூத்துக்குடி மாவட்டங்களில் செயல்பட தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன.

கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 126. பெற்றோர்களில் ஒருவரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 56. அவர்களுக்கான திட்டத்திற்காக 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண் சிசு கொலை விழிப்புணர்வு

பெண் சிசு கொலை தற்போது இல்லை. இருந்தபோதும், ஏற்கனவே பெண் சிசு கொலை நடைபெற்ற மாவட்டங்களில் அது குறித்தான விழிப்புணர்வை மேற்கொள்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சமூக நலத்துறையில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், உதவியாளர், சமையலாளர் உள்ளிட்ட பணிகளுக்கு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்படும்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.