ETV Bharat / state

இந்தியாவிலேயே கைத்தறி நெசவுத்தொழிலில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது - அமைச்சர் காந்தி - Tamil Nadu is the pioneer of handloom in India

"கைத்தறி நெசவுத்தொழிலில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது'' என்று துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே கைத்தறி நெசவுத் தொழிலில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது- அமைச்சர் காந்தி

author img

By

Published : Sep 21, 2022, 10:25 PM IST

சென்னை: "World Association for Small and Medium Enterprises" ஒருங்கிணைப்பில் ஒன்றிய சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை மற்றும் தமிழ்நாடு காதி - துணிநூல் துறை மற்றும் சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் ஒத்துழைப்புடன் குளோபல்ஸ்பின் என்ற வர்த்தக மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நெசவு செய்யப்படும் பட்டு மற்றும் பருத்தி நூல் சேலைகள், வாழை நாரில் தயார் செய்யப்பட்ட நூலால் நெசவு செய்யப்பட்ட துணிகள், கைவினைக்கலைஞர்களின் தயாரிப்புகள், பழங்குடியின மக்களின் தயாரிப்புகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இந்த கண்காட்சியை தமிழ்நாடு காதி கிராமத்தொழில்கள் மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

முன்னதாக மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் காந்தி, "கைத்தறி நெசவுத்தொழிலில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கைத்தறி நெசவுத்தொழிலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

காதி என்ற பிராண்ட்டை மேம்படுத்தி, கைத்தறி மற்றும் பல்வேறு பாரம்பரிய பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். அந்த விற்பனையை மேம்படுத்த நிதி உதவி மட்டுமின்றி, பல்வேறு நவீன முறையில் விற்பனையை கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார்.

இதனைத்தொடர்ந்து கோ-ஆப்டெக்ஸ் மூலம் கைத்தறி நெசவுத்தொழிலை மேம்படுத்தவும், விற்பனை முறைகளை நவீனப்படுத்தவும் உதவும் வகையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காந்தி, "தயாரிப்பு மற்றும் விற்பனையில் நவீன தொழில் நுட்பத்தை கைத்தறி தொழிலில் புகுத்தும் வகையில் இந்த மாநாடு அமைந்துள்ளது. இதற்காக 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இதுவரை இந்த துறையில் இப்படி ஒரு செயல்பாடு நடந்ததே இல்லை. இதுதான் முதல்முறை. முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சி தான் இதற்குக் காரணம். நம்முடைய கைத்தறிப்பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு கைத்தறி துறையில் நாம் சிறந்து விளங்குகிறோம். இதுவரை 500 புதிய டிசைன்களை கைத்தறி உடைகளில் அறிமுகப்படுத்தியுள்ளோம். தரத்தையும் மேம்படுத்தி, அதற்கு உரிய சான்றையும் வழங்குகிறோம்" என்றார்.

இதையும் படிங்க:திருவண்ணாமலை சாமியார்களுக்குப் புதிதாக அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.