ETV Bharat / state

'சிறு துறைமுகங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் ஒன்றிய அரசு'

சிறுதுறைமுகங்களுக்கான புதிய சட்ட முன்வடிவில் ஒன்றிய அரசு முழு அதிகாரம் பெறும் வகையில் உள்ளது. அவ்வாறு அமைந்தால் ஒன்றிய அரசு சொல்வதை மாநில அரசு கேட்கும் நிலை உருவாகும். இவை மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் செயல் எனத் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

E.V.Velu
E.V.Velu
author img

By

Published : Jun 25, 2021, 6:27 AM IST

சென்னை: மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு துறைமுகங்களை முறைப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள புதிய துறைமுக சட்ட முன்வடிவு குறித்து காணொலி வாயிலாக ஆலோசனை நடைபெற்றது. ஒன்றிய துறைமுகம், கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் மன்சுக் எல் மண்டவியா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்துகொண்டார்.

சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து செயல்படுத்துக

இதில், சேது சமுத்திர கப்பல் கால்வாய்த் திட்டத்தை ஒன்றிய அரசு விரைந்துசெயல்படுத்த வேண்டும், தூத்துக்குடியில் அமைந்துள்ள வஉசி துறைமுகத்தை சரக்கு மாற்று முனையமாக மாற்றுவதற்கு விரிவாக்கம் செய்யும் திட்டத்தை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என அமைச்சர் ஏ.வ. வேலு கேட்டுக்கொண்டார்.

மாநில அரசின் உரிமையைப் பறிக்க முயற்சி

இதனைத் தொடர்ந்து இக்கூட்டத்தில் சிறு துறைமுகங்கள் தொடர்பாக பேசிய அமைச்சர், 1908ஆம் ஆண்டு இந்தியத் துறைமுகங்கள் சட்டப்படி, துறைமுகங்கள் திட்டமிடுதல், மேம்படுத்துதல் வரையரையப்படுத்துதல், கட்டுப்படுத்துதல் ஆகிய அதிகாரங்கள் மாநில அரசிடம் உள்ளது. இந்த வரைவு சட்டத்தின்படி மேற்கண்ட அதிகாரங்களை மாநில அரசிடமிருந்து பறித்திட கூடியதாக உள்ளது என்றார்.

கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமம்

கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமம் தற்போது ஆலோசனை அமைப்பாக உள்ளது. இவ்வரைவின் விதிகளின்படி இக்குழுமம் சிறு துறைமுகங்களை ஒழுங்குமுறை செய்யும் அமைப்பாகச் செயல்பட உள்ளது. மேலும், இக்குழும் ஒன்றிய அரசின் அலுவலர்களை மட்டும் உள்ளடக்கியதாக மாற்றி அமைக்கப்பட உள்ளது. இந்தப் புதிய வரைவு சட்டத்தின்படி பல அம்சங்களில் விதிகளை உருவாக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் செல்ல உள்ளது. இதன்மூலம் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன என அமைச்சர் ஏ.வ. வேலு கூறினார்.

இதைத் தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எ.வ. வேலு, "இந்திய கடலோரப் பகுதிகளில் உள்ள ஒன்பது மாநிலங்களின் அமைச்சர்கள் உடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்தியாவில் ஒன்றிய அரசு, மாநில அரசுகள் துறைமுகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இதில் தமிழ்நாட்டில் 17 சிறு துறைமுகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

சிறு துறைமுகங்களுக்கான புதிய சட்ட முன்வடிவு

சிறு துறைமுகங்களைப் பொறுத்தவரையில் அதை விரிவாக்கம் செய்தல், கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவை மாநில கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் சிறு துறைமுகங்களுக்கான புதிய சட்ட முன்வடிவில் ஒன்றிய அரசு முழு அதிகாரம் பெறும் வகையில் உள்ளது.

அவ்வாறு அமைந்தால் ஒன்றிய அரசு சொல்வதை மாநில அரசு கேட்கும் நிலை உருவாகும். இவை மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் செயல். இதை எடுத்துக்கூறிதான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்பது மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதினார்.

சிறு துறைமுகங்களுக்கான புதிய சட்ட வரைவுக்கு எதிர்ப்பு

இந்திய கடற்கரை தூரங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இவற்றில் 17 துறைமுகங்களை விரிவுப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த நிலையில் ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள வரைவுச் சட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்ப்புத் தெரிவித்துப் பேசினேன். அப்போது ஒன்றிய அரசுத் தரப்பில் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சரிடம் பேசாமல் எந்த முடிவு எடுக்கப்பட மாட்டாது என எனக்கு உறுதியளித்தனர்.

சேது சமுத்திரத் திட்டத்தில் ஒன்றிய அரசு கவனம்

குஜராத் மாநிலம் இந்தச் சட்ட மசோதாவுக்கு ஆதரவு அளித்தது, கர்நாடக அரசு இது குறித்து முடிவெடுக்க கூடுதல் நேரம் கேட்டு வாதிட்டது. இதைத் தவிர அனைத்து மாநிலங்களும் இதனை எதிர்த்தன. மாநில அரசின் உரிமைகளை ஒன்றிய அரசு பறிக்கிறது. சேது சமுத்திரத் திட்டம் குறித்து கவனத்தில் எடுத்துகொள்வதாக ஒன்றிய அரசு கூறியது" என்றார்.

இதையும் படிங்க: சேலம் எட்டு வழிச்சாலை, தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.