ETV Bharat / state

ரூ.1600 கோடி இழப்பு: பேக்கேஜிங் சிஸ்டம் ரத்து

பேக்கேஜிங் சிஸ்டம் முறையில் சாலை அமைக்கும் திட்டத்தில் ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதால் ஆகஸ்ட் 27 முதல் இத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

Road construction project  minister e v velu  minister e v velu speech  minister e v velu speech on Road construction project  chennai news  chennai latest news  discussion on budget  budget  சென்னை செய்திகள்  பேக்கேஜிங் சிஸ்டம் முறையில் சாலை அமைக்கும் திட்டம்  சாலை அமைக்கும் திட்டம்  அமைச்சர் எ வ வேலு  சாலை கட்டுமானத் திட்டம் குறித்து அமைச்சர் அமைச்சர் எ.வ.வேலு பேச்சி  சட்டபேரவை  மானியக் கோரிக்கை மீதான விவாதம்
எ வ வேலு
author img

By

Published : Aug 28, 2021, 7:01 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. நேற்றைய (ஆகஸ்ட் 27) விவாதத்தில் கடந்த காலத்தில் கிராமப்புறச் சாலைகள் தரம் உயர்த்தப்படவில்லை என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன் கருத்து தெரிவித்தார்.

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்தும் திட்டம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டம். அதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்திவந்தோம். 8000 கி.மீ. கிராமப்புறச் சாலைகள் தேர்வுசெய்யப்பட்டன.

இது ஜெயலலிதா கொண்டுவந்த திட்டம்

அதில் 6000 கி.மீ. சாலைகள் தரம் உயர்த்தும் பணி நிறைவுபெற்றுள்ளது. மாநிலச் சாலைகளாக இருந்தாலும், நெடுஞ்சாலைகளாக இருந்தாலும் முடிவுபெற்றச் சாலைகள்தாம் இங்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஜெயலலிதா கொண்டுவந்த இந்தத் திட்டத்திற்கு இ- டெண்டர்தான் விடப்பட்டது.

அதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இதில் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை. எங்கள் மீது திட்டமிட்டு குற்றம் சுமத்துவதற்கென இதைப் பேசுகிறார்கள். எல்லா இடங்களிலும் ஒப்பந்ததாரர்கள் தகுதிக்கேற்ற ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளனர். மேலும் எங்கள் ஆட்சியில்தான் அதிக சாலைகளை அமைத்திருக்கின்றோம்.

நில உரிமையாளர்களிடமிருந்து நிலம் எடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது. நில உரிமையாளர்கள் நீதிமன்றம் சென்றதால்தான் பணி தாமதமாகியுள்ளது” என்றார். இதற்குப் பதிலளித்த எ.வ. வேலு, “ஒரு மாவட்டத்தில் பல சாலைகள் உள்ளன. அதற்கான பணிகள் விரைந்து செயல்பட வாய்ப்பிருக்கிறது.

பேக்கேஜிங் சிஸ்டம் ரத்து

அன்று எதிர்க்கட்சியாக இருந்த நாங்கள், ஆளும் அரசின் குறைகளை, குற்றச்சாட்டுகளை அன்றே சுட்டிக்காட்டினோம். தரமான சாலைகள் இல்லை எனப் பலர் புகார் அளித்தனர். அதனடிப்படையில் பேக்கேஜிங் சிஸ்டம் என்ற திட்டத்தை ரத்துசெய்வோம் என தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டிருந்தோம்.

ஒரு சில ஒப்பந்ததாரர் மட்டுமே பயனடைகிறார்கள். ஒப்பந்ததாரர்கள் இடையே ஆக்கப்பூர்வமான போட்டி இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால் பணிகளைச் செயலாக்க அரசிற்குக் கூடுதல் செலவினங்கள் ஏற்படும். இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதால் சாலைப் பணியாளர்கள், ஆய்வாளர்கள் பலர் வேலையிழக்கும் சூழல் உண்டாகிறது.

இது வேலைவாய்ப்பை உருவாக்குவதற்குச் சவாலாக அமைந்துவிடும் என்பதால் பேக்கேஜிங் சிஸ்டம் முறையிலான சாலை அமைக்கும் திட்டம் முதலமைச்சரின் அனுமதியோடு இன்றுமுதல் (ஆகஸ்ட் 27) ரத்துசெய்யப்படுகிறது" என்றார்.

அரசுக்கு இழப்பு

இதையடுத்து மீண்டும் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாட்டில் ஒப்பந்ததாரர்கள் தகுதியின் அடிப்படையில் எங்கே வேண்டுமானாலும் ஒப்பந்தம் கோரலம்" என்றார். இதற்கு பதிலளித்துப் பேசிய எ.வ. வேலு, "மாவட்டங்களில் தகுதியுள்ள ஒப்பந்ததாரர்களுக்கு, ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறவில்லை என்று நான் கூறினேன்.

எந்த அடிப்படையில் நமது ஒப்பந்ததாரர்கள் தகுதியை இழக்கிறார்கள். மேலும், பேக்கேஜிங் சிஸ்டம் முறையில் சாலை அமைக்கும் திட்டத்தில் ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவிற்கு அரசுக்கு இழப்பு (கடந்த ஆட்சியில்) ஏற்பட்டுள்ளது” என விளக்கினார்.

இதையும் படிங்க: இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக ரூ.317 கோடி ஒதுக்கீடு - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.