ETV Bharat / state

"காவிரி நீரை கேட்கும் உரிமை தமிழக விவசாயிகளுக்கு உண்டு" - அமைச்சர் துரைமுருகன்! - காவிரி பிரச்சனை

Cauvery water issue : கர்நாடக விவசாயிகள் காவிரி நீரை கொடுக்க வேண்டாம் என்று கூறினால், காவிரி நீர் வேண்டும் என்று கேட்கும் உரிமை தமிழக விவசாயிகளுக்கு இருக்கிறது என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Cauvery water issue
"காவிரி நீரைக் கேட்கும் உரிமை தமிழக விவசாயிகளுக்கு உண்டு" - அமைச்சர் துரைமுருகன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 4:05 PM IST

சென்னை: தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க உத்தரவிட்ட காவிரி நதிநீர் பங்கீட்டு குழு, தமிழ்நாடு அரசை கண்டித்து கர்நாடகாவில் பல்வேறு அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த செயல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

காவிரி விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், "எங்களின் வாதம் ஒன்றே தான். 12 ஆயிரத்து 500 கன அடி நீர் தேவை தான் என்று நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறோம். காவிரி ஒழுங்குமுறை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 5 ஆயிரம் கன அடி நீர் தான் தர ஒப்புக்கொண்டது. அந்த 5 ஆயிரம் கன அடி தான் தற்போது வந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்த தண்ணீர் அளவு தமிழ்நாட்டிற்கு போதுமானதாக இல்லை.

தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்களில் பயிரானது காய்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் போதுமான நீர் வருவதில்லை. மொத்த குறுவையையும் இந்த நீரினை வைத்து, விவாசயம் செய்வது என்பது கடினம். தற்போது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கு அளவிற்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் இருக்கிறது. கர்நாடக அணையில் போதுமான அளவில் தண்ணீர் இருக்கிறது.

ஆனால் மேட்டூரில் சென்ற ஆண்டை விட 90 விழுக்காடு நீர் இருப்பு குறைந்துள்ளது. மேலும் ஒரு பாசன பகுதியில், கடைமடை மக்களுக்கு தான் முன்னுரிமை தர வேண்டும். ஆனால் காவிரி தொடர்பாக உத்தரவுகளுக்கு கர்நாடக மாநிலம் தொடர்ந்து ஏற்பதில்லை. தற்போது காவிரி ஒழுங்கு முறை ஆணையம், காவிரி மேலாண்மை ஆணயம், உச்ச நீதிமன்றம் ஆகியைவைக்கு கட்டுப்பட்டு, தற்போது திறந்து விடும் தண்ணீருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் காவிரி நீர் திறந்து விடுவதை குறித்து செய்தியாளர்கள் கேள்வி பதிலளித்த அமைச்சர், காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநிலம் உச்ச நீதிமன்ற செல்வது, அம்மாநில அரசின் விருப்பம். மேலும் போதுமான தண்ணீர் கிடைக்க கூட்டாச்சி தத்துவம் முறையில், உச்ச நீதிமன்றத்தையும், காவிரி ஆணையங்களை நாட முடியும்.

இதை தவிர்த்து வேறு நாங்கள் என்ன செய்ய முடியும். நாங்கள் படை எடுக்க முடியுமா, இல்லை நான் தான் அங்கு சென்று தண்ணீர் திறக்க முடியுமா?. இரு மாநிலங்களும் நட்புறவுடன் இருக்க வேண்டும். நாம் அனைவரும் இந்தியர்கள் எண்ணம் இருக்க வேண்டும். மேலும் கர்நாடக விவசாயிகள் காவிரி நீரை கொடுக்க வேண்டாம் என்று கூறும்போது, காவிரி நீர் வேண்டும் என்று கேட்கும் உரிமை தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இருக்கிறது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கர்நாடகா பந்த காரணமாக ஈரோடு எல்லையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.