ETV Bharat / state

"மீண்டும் மீண்டும்" கேட்ட பூவை ஜெகன்மூர்த்தி "முயற்சி முயற்சி" செய்வதாக சொன்ன துரைமுருகன் - Minister Durai Murugan

சட்டமன்றப் பேரவை, வினா விடை நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தியின் கேள்விக்கு மோர்தனா அணை நீரை பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்ல முயற்சி செய்கிறேன் என்றார் அமைச்சர் துரை முருகன்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
’’மோர்தனா அணை நீரை பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்ல முயற்சி’’ - அமைச்சர் துரை முருகன்
author img

By

Published : Mar 30, 2023, 4:17 PM IST

சென்னை: சென்னை சட்டமன்றப் பேரவையில் இன்றைய வினா விடை நேரத்தில் கே.வி குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தி, ’’மோர்தனா அணையிலிருந்து வரும் தண்ணீரை பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்ல அரசு முன்வருமா’’ என்று கேள்வி எழுப்பினார். மோர்தனா அணையில் இருந்து வரும் நீர் வீணாக பாலாற்றில் கலந்துக் கடலுக்குச் செல்கிறது. அதை பாக்கம் ஏரிக்கு திருப்பி விட்டு குடியாத்தம் நகரின் குடிநீர்ப் பயன்பாட்டுக்காகத் திருப்ப வேண்டும் என கே.வி குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தி கேள்வி எழுப்பினார்.

மேலும் இது அமைச்சரின் சொந்த ஊர் என்பதால் பம்பிங் மூலமாவது ஏரிக்குக் குடிநீரை ஏற்ற முயற்சிச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போது பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ’’பாக்கம் ஏரி முறைப்படுத்தாத ஏரி. இதன் ஆயக்கட்டு 214 ஏக்கர் மட்டும் தான். இதன் கொள்ளவு மிக குறைவாக 3.15 மீட்டர் உள்ளதால் பம்பிங் மூலம் ஏரிக்கு குடிநீரை ஏற்ற முயற்சிச் செய்வதும் சிரமம்’’ என்றார்.

இதற்கு மறுமொழி கூறிய சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தி, “தட்டப்பாறை வழியாக சுற்றிக்கொண்டு கால்வாயை கொண்டு வந்தால் கண்டிப்பாக ஏரியில் ஏற்ற வாய்ப்பு உள்ளது. பாக்கம் ஏரியின் நீர் கடலுக்குச் செல்வது இல்லை. மீண்டும் மீண்டும் சொல்கிறேன் மறுப் பரிசீலனைச் செய்யுங்கள் தொடர்ந்து அதற்கான முயற்சியை எடுக்கவும்’’ என்றுக் கேட்டுக் கொண்டார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ’’தண்ணீர் ஏரிக்கு போகுதோ இல்லையோ, ஆனால் எனது நீண்ட நாள் நண்பர் ஜெகன் மூர்த்தி திருப்பி திருப்பி சொன்னதால் நானும் முயற்சி செய்து பார்த்து முடிந்த அளவுக்கு செய்கிறேன்’’ என்றார்.

அமைச்சர் துரை முருகனின் இந்த நையாண்டி பதிலால் பேரவையில் சிறிது சிரிப்பலை ஏற்பட்டது. பின்னர் பேசிய பிச்சாண்டி எம்.எல்.ஏ, கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதியில் நந்தன் கால்வாயில் வீணாகும் நீரைச் சரி செய்ய வேண்டும் என்றும் குப்ப நத்தம் அணைக்கட்டுக்கு, நிலம் கொடுத்த கிராம மக்களுக்கே தண்ணீர் போகாமல் இருக்கும் நிலை உள்ளது என்றும் லிப்ட் இரிகேஷன் மூலம் பாசன வசதி செய்யப்படுமா என்றும் ஒரே நேரத்தில் மூன்று கேள்விகளை எழுப்பினார்.

இதையும் படிங்க: கோயில் நிலத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆபிஸ் கட்ட அனுமதி: ரங்கராஜன் நரசிம்மன் வழக்கில் ட்விஸ்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.