ETV Bharat / state

அமைச்சர் பெஞ்சமின் அவதூறு பேச்சு - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

சென்னை: திமுக இளைஞரணி நிர்வாகிகளை கொச்சையான வார்த்தைகளால் திட்டிய அமைச்சர் பெஞ்சமின் மீது திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டதாக திமுக தலைமை வழக்கறிஞர் நீலகண்டன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைமை வழக்கறிஞர்கள்

author img

By

Published : Apr 7, 2021, 6:08 PM IST

அமைச்சர் பெஞ்சமின் அவதூறு பேச்சு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், ஆவடி சட்டப்பேரவைத் தொகுதியில் இரண்டு வாக்கு எண்ணும் மையம் அமைக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைமை வழக்கறிஞர் நீலகண்டன் மற்றும் பச்சையப்பன் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் பேசுகையில், “சட்டப்பேரவை பொதுத்தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு திமுக சார்பில் ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம். அதிமுகவினர் பலமுறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதை தலைமை தேர்தல் அதிகாரியிடம் எடுத்துக் கூறினோம். நேற்று (ஏப்.6) வாக்குப்பதிவின்போது அதிமுக அமைச்சர் பெஞ்சமின், திமுகவைச் சேர்ந்த இளைஞரணி அமைப்பாளர் உள்ளிட்டோரை கொச்சையான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைமை வழக்கறிஞர்கள்

மேலும் மாதிரி நன்னடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களை அச்சுறுத்தி இருக்கிறார். வேளச்சேரி உள்ளிட்ட சில இடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்ட பிறகு அவை அகற்றப்பட்டிருக்கிறது. வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை வாக்கு எண்ணும் மையத்தை முழுமையாக கண்காணிக்க அனுமதிக்க வேண்டும். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்” என்றார்.

இதையும் படிங்க : வாக்கு எண்ணும் மையங்களை 24 மணி நேரமும் கண்காணியுங்கள் - அதிமுக

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.