ETV Bharat / state

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது எப்போது ? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் ..

பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முதலமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது எப்போது ? - அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன பதில் ..

author img

By

Published : Jan 26, 2022, 12:34 PM IST

சென்னை கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் 73 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியினை ஏற்றி, சிறப்பாக பணியாற்றிய சாரண சாரணியர் களுக்கு விருதுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கு ஒரே நேரத்தில் முடியாது. அரசுப்பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்குத் தொடர்ந்து அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதை படிப்படியாகச் செய்வோம். அரசு பள்ளிகளைத் தரம் உயர்த்துவதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தீவிரமாக உள்ளார்.

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது எப்போது ? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

மாநகராட்சி மேயராக இருந்த பொழுதே பள்ளி கல்வித்துறை மீது அதிக அக்கறையாக செயல்பட்டவர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் உடனடியாக அனுப்ப வேண்டும். பேரறிஞர் அண்ணா காலத்தில் எடுத்த தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலிருந்து நாம் என்றும் பின்வாங்க மாட்டோம்.

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது எப்போது
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது எப்போது

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதால் அதில் கவனம் செலுத்தி வருகிறோம். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முதலமைச்சருக்குப் பரிந்துரை செய்துள்ளோம்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி பேட்டி
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி பேட்டி

முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்பார். முன்பு 2 திருப்புதல் தேர்வுகள் நடத்தத் திட்டமிட்டிருந்தோம் தற்போது பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்படும். பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கும் பட்சத்தில் கட்டாயம் ஒரு திருப்புதல் தேர்வு நடக்கும், ஒரு திருப்புதல் தேர்வு மட்டுமே நடத்தப்படும், மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்க வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது எப்போது
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது எப்போது

பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினாத்தாள் வடிவமைப்பில் எந்தவித மாற்றமும் இருக்காது. இதற்கு முன்பு பொதுத்தேர்வு கேள்வித்தாள் எப்படி இருந்ததோ அப்படியேதான் இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் - அண்ணாமலைக்கு எதிராக புகார்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.