சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று (ஏப். 17) பள்ளி கல்வித்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், பள்ளி கல்வித்துறையின் சில முக்கிய அம்சங்களை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அவை பின்வருமாறு,
சிறப்பு அம்சங்கள்.
*இதுவரை தமிழ் இணைய கல்வி கழகம் மூலம் 875 உயர்கல்வி நூல்களை டிஜிட்டல் மயமாக்கி 655 அரிய நூல்களை வெளியிட்டுள்ளது. மேலும் ரூ.14 லட்சம் மதிப்பிலான அரிய புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
* 2022-2023ஆம் ஆண்டிற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ரூபாய் 4.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல், இதுவரை ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 455 ஆசிரியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அனைத்து ஆசிரியர் தேர்வுகளும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
* பொது நூலக இயக்கத்திற்கு 2022-23 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு ரூபாய் 287.27 கோடி அரசு வழங்கியுள்ளது. மிகச்சிறந்த செயலாக்கம் கொண்ட நூலகர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளிப் பதக்கத்துடன் 5ஆயிரம் ரொக்கப் பரிசு கொண்ட முனைவர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருதும், நூலகம் மேம்பாட்டு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளும் நூலகங்களுக்கு சிறந்த நூலாக விருதும் வழங்கப்படுவதோடு நூலக வளர்ச்சிக்கு துணை புரியும் வாசகர் வட்டத்தலைவர்களை பாராட்டும் வகையில் ரூபாய் 5000 மதிப்புள்ள கேடயம் மற்றும் சான்றிதழுடன் கூடிய நூலக ஆர்வலர் விருதும் வழங்கப்படுகிறது.
* குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் 18 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும் மூன்று சிறந்த எழுத்தாளர்களை தேர்வு செய்து ரூபாய் 25 ஆயிரம் ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் கவிமணி விருது வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* தமிழ் மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களை போற்றும் வகையிலும், அறிஞர் பெருமக்களை இளம் தலைமுறையினர் முன்மாதிரியாக கொள்ளும் வகையிலும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் செந்தமிழ் சிற்பிகள் அரங்கம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
* கன்னிமாரா பொது நூலகம், தமிழ்நாடு தொல்லியல் நூலகம், தமிழ்நாடு ஆவணக் காப்பக நூலகம், பல்கலைக்கழக நூலகங்கள், கல்லூரி நூலகங்கள் மற்றும் தனியார் நூலகங்களில் உள்ள அறிவியல் நூல்களில், 21 ஆயிரத்து 43 நூல்கள், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வரைபடங்கள் மற்றும் 2.54 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடி பக்கங்கள் மின் உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளன.
* தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்கத்தின்கீழ் 1926 கிளை நூலகங்கள் மற்றும் 1915 ஊர்ப்புற நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. சர்வதேச நாளிதழ்கள், பருவ இதழ்கள் கிராமப்புறங்களில் உள்ள வாசகர்களுக்கும் கிடைக்கும் வண்ணம் அனைத்து நூலகங்களிலும் மின்நூலகம் அடுத்த 5 ஆண்டுகளில் 2.40 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்படும்.
* தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் உருவாக முக்கிய பங்காற்றிய இந்திய நூலகத்தந்தை முனைவர் எஸ்.ஆர்.அரங்கநாதன் அவர்களை நினைவூட்டும் வகையில் அவர் பிறந்த மதுரை மாவட்டத்திலுள்ள சீர்காழியில் 1.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாதிரி நூலகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* மதுரையில் கலைஞர் நினைவு நூலகத்திற்கு தேவையான நூல்கள், மின்னூல்கள் இணையம் வழியே பருவ இதழ்கள் மற்றும் ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்வதற்கு ரூபாய் 10 கோடியும் தொழில்நுட்ப சாதனங்கள் கொள்முதல் செய்வதற்கு ரூபாய் 5 கோடியும் தமிழ்நாடு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
* 2020-21ஆம் ஆண்டில் நூலக வரியாக ரூ.71.02 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. பகுதி நேர நூலகங்கள் வாயிலாக 3 லட்சத்து 25 ஆயிரத்து 732 உறுப்பினர்களும், 7 லட்சத்து 50 ஆயிரத்து 205 வாசகர்களும் பயனடைந்துள்ளனர்.
* ராமநாதபுரம் மாவட்டம், அபிராம் அதில் தற்போது வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்திற்கு ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடமாடும் நூலகம் 33 ஆயிரத்து 476 உறுப்பினர்களும் 13 ஆயிரத்து 390 வாசகர்களும் பயனடைந்துள்ளனர்.
* ஊர்ப்புற நூலகங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. 2021-22ஆம் ஆண்டில் 52 லட்சத்து 50ஆயிரத்து 1808 வாசகர்கள், 21 லட்சத்து 08,979 உறுப்பினர்கள் பயன்பெற்றுள்ளனர். இந்த நூலகத்தில், 2,09,82,767 நூல்கள் இடம் பெற்றுள்ளன.
* தற்போது 314 முழுநேர கிளை நூலகங்களை உள்ளடக்கிய 1926 கிளை நூலகங்கள் 5,79,74,340 நூல்கள் மற்றும் 62,76,245 உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகின்றன. 2021-22ஆம் ஆண்டில் 83 லட்சத்து 37 ஆயிரத்து 779 வாசகர்கள் இந்த நூலக வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
*மறைமலை அடிகள் நூலகத்திற்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. சரஸ்வதி மஹால் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 75 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 2021-22ஆம் ஆண்டிற்கு கூடுதலாக 50 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
* அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு புதுப்பொலிவுடன் புனரமைக்கவும் மற்றும் தொழில்நுட்ப வன்பொருட்கள் வாங்கிப் பொருத்துவதற்கு 37.82 கோடி தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அச்சு நூல்கள், மின்நூல்கள், இணையவழியில் பருவ இதழ்கள் மற்றும் ஆராய்ச்சி இதழ்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்காக ரூபாய் 6.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கன்னிமாரா பொது நூலகத்தின் பழைய நூலக கட்டடத்தை புதுப்பித்தல் பணிக்கு ரூ.1.50 கோடி செலவிலும், மின் சாதனங்கள் மற்றும் உயர் மின் அழுத்த மின் இணைப்பு சீரமைக்கும் பணிகள் ரூ.3.20 கோடி செலவில் பொதுப்பணித் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* தமிழ்நாட்டில் தற்போது 4650 பொது நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
* பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்விக்காக 2022-23ஆம் ஆண்டிற்கு வரவு செலவு திட்டத்தின் கீழ் ரூபாய் 9.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* அரசு தேர்வுகள் இயக்கத்திற்கு 2022-23 ஆண்டிற்கு வரவு செலவு திட்டத்தில் ரூ.128.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 2021-22ஆம் ஆண்டில் 7010 புலப்பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 3,55,046 மதிப்பெண் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்டுள்ளது.
* மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு 2022-23 ஆண்டிற்கு ரூபாய் 105.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு 2022-23 ஆண்டிற்கு ரூபாய் 353.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தொடக்க கல்வி, உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விக்கு 2022-23 ஆண்டிற்கு ரூபாய் 18,251.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பள்ளி கல்வி துறைக்கு 2022-23 ஆண்டிற்கு ரூபாய் 36,89,589.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் மற்றும் அவருடைய செயல்திறனை ஊக்குவிப்பதற்கும் சுமார் ரூபாய் 260.02 கோடி மதிப்பில் 11 கல்வி உபகரண பொருட்களை இந்த கழகம் கொள்முதல் செய்து 2022-23 ஆம் ஆண்டில் வழங்க உள்ளது.
* 8870 உயர்கல்வியின் நுழைவு தேர்வு வினா வங்கி புத்தகங்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பியர்சன் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஆறு தொகுதிகளாக வெளியிடப்பட்டு ரூபாய் 2,15,18,200/- மதிப்பில் அரசின் பயிற்சி மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் உள்ள மாதிரி பள்ளிகளுக்கு புத்தகங்களின் இரண்டாயிரம் படிகள் முதல் கட்டமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அவரது படைப்புகளின் ஒரு தொகுப்பான "மனதில் உறுதி வேண்டும்" என்ற நூலை தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறையுடன் இணைந்து இந்த ஆண்டில் இக்கழகம் வெளியிட உள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 37 லட்சம் பள்ளி மாணவர்களுக்கும் ரூபாய் 5 கோடி செலவில் இப்புத்தகங்கள் வழங்கப்படும். பொருநை நாகரிகம் என்ற நூலை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையுடன் இணைந்து இக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்நூலின் பத்தாயிரம் பிரதிகள் தமிழிலும், 5000 பிரதிகள் ஆங்கிலத்திலும் இவ்வாண்டில் வெளியிடப்பட்டுள்ளன.
* இதுவரை தமிழ் இணைய கல்வி கழகம் மூலம் 875 அருகே உயர்கல்வி நூல்களை டிஜிட்டல் மயமாக்கி 655 அரிய நூல்களை வெளியிட்டுள்ளது. ரூபாய் 14.14 லட்சம் மதிப்பிலான அரிய புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
* 2022- 2023ஆம் ஆண்டிற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ரூபாய் 4.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* இதையும் படிங்க: பள்ளிக்கல்வித்துறை சார்பில் 34 புதிய அறிவிப்புகள்!