ETV Bharat / state

திருவல்லிக்கேணியின் செல்லப்பிள்ளை: 'தமிழகமே உதயநிதியை கொண்டாடும் நாள் வரும்' - அமைச்சர் மகேஷ் - உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருவல்லிக்கேணி தொகுதியின் செல்லப்பிள்ளையாகவே மாறிவிட்டதாகவும், நடந்து முடிந்த தேர்தலின்போது தமிழ்நாடு முழுவதும் உதயநிதி அயராது உழைத்தார், அதை அவரது அருகிலிருந்து நாங்கள் பார்த்து உள்ளோம். தமிழகமே உதயநிதி ஸ்டாலினை கொண்டாடும் நாள் வரும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகமே உதயநிதி ஸ்டாலினை கொண்டாடும் நாள் வரும்

author img

By

Published : Nov 27, 2021, 9:22 PM IST

Updated : Nov 27, 2021, 10:09 PM IST

சென்னை: திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில் பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட எருக்கஞ்சேரி தனியார் பள்ளிகள் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த, நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, "மழை வெள்ளப் பாதிப்பு என்றவுடன் கோட்டையிலிருந்து கொண்டே ஆர்டர் போடும் முதலமைச்சர் நமது முதலமைச்சர் கிடையாது. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு அதற்குத் தீர்வுகளைக் காணும் முதலமைச்சரை நாம் பெற்றுள்ளோம்.

தமிழகமே உதயநிதி ஸ்டாலினை கொண்டாடும் நாள் வரும் - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

இந்தியாவிலேயே முன்னுதாரணமாகத் திகழும் முதலமைச்சர்

இந்தியாவிலேயே முன்னுதாரணமாகத் திகழும் முதலமைச்சராக நம் முதல்வர் இருந்து வருவதாகவும், குறிப்பாகக் காவல் துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டிலிருந்த காலம் மாறி தற்போது முதலமைச்சர் காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளர் இருக்கையில் அமர்ந்து கோப்புகளைச் சரிபார்த்து மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் விதமாகச் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

திருவல்லிக்கேணியின் செல்லப்பிள்ளை
திருவல்லிக்கேணியின் செல்லப்பிள்ளை

திருவல்லிக்கேணியின் செல்லப்பிள்ளை

மேலும், உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியின் செல்லப்பிள்ளையாகவே மாறிவிட்டதாகவும், ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று அவர் குறைகளைக் கேட்டு அந்த குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார்.

நண்பனின் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்து

உதயநிதி அயராது உழைத்தார்

நடந்து முடிந்த தேர்தலின்போது தமிழ்நாடு முழுவதும் உதயநிதி ஸ்டாலின் அயராது உழைத்தார் எனவும், அதை அவரது அருகிலிருந்து நாங்கள் பார்த்து உள்ளோம் தமிழகமே உதயநிதி ஸ்டாலினை கொண்டாடும் நாள் வரும்" என்று பேசினார்.

மேலும், பெரம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்டி.சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பிகே சேகர்பாபு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்ட திமுகவினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்குத் தையல் இயந்திரம், மிதிவண்டி, அரிசி, மளிகை பொருள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: பயமா.. எனக்கா.. 100 அடி கிணற்றில் டைவ் அடிக்கும் 85 வயது மூதாட்டி

Last Updated : Nov 27, 2021, 10:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.