சென்னை: அமைச்சராக பதவியேற்றது முதலாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் செயல்பாடுகள் பரவலாக பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.
அந்த வரிசையில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தற்போது அவர் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதில் உறுதியான உடற்பயிற்சியால் உடலும் உள்ளமும் வலுபெறட்டும் எனக் கூறும் அமைச்சர் அன்பில் மகேஷ், அதை செய்தும் காட்டியுள்ளார்.
பெற்றோருக்கு அட்வைஸ்
கிரிக்கெட், கயிறு ஏறுதல், மூச்சு பயிற்சி செய்தல் போன்றவற்றை அவர் மேற்கொள்வதுடன், பெற்றோர் தங்கள் குழந்தைகளை விளையாட அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல் நலனைப் பேணுவதில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாகவும் வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நவரசா அனுபவத்தை பகிரும் கார்த்திக் நரேன்!