ETV Bharat / state

'அமைச்சர் அன்பழகன் விரைவில் வீடு திரும்புவார்' - மருத்துவமனை தகவல் - Minister of Higher Education Anbalagan

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் குணமடைந்து வருகிறார், விரைவில் வீடு திரும்புவார் என அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

minister-anbalakan
minister-anbalakan
author img

By

Published : Jul 12, 2020, 3:45 AM IST

தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

அதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை நிர்வாக இயக்குநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் "அமைச்சர் கே.பி.அன்பழகன் வேகமாக குணமடைந்து வருகிறார். விரைவில் முழுவதும் குணமடைந்து வீடு திரும்புவார். சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளை நம்பவேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உயர்கல்வித்துறை அமைச்சர் நலம் பெற 101 பால்குடம் எடுத்து வேண்டுதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.