சட்டப்பேரவையில் நேற்று (செப்.16) பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், அரியர் தேர்வில் மாணவர் சமுதாயம் பயப்படத் தேவையில்லை, யூஜிசி, ஏஐடிசிஇ விதிமுறைகளுக்கு உட்பட்டே தமிழ்நாடு உயர்கல்வி செயல்படுகிறது. செமஸ்டர் இறுதி தேர்வு தவிர பிற தேர்வுக்கு பணம் செலுத்திய அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு அரசின் முடிவை ஏற்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மறுப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் ஏஐசிடிஇ எந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.