மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் (ஆவின் மற்றும் தனியார் பால் முகவர்கள் - உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) சார்பாக அதன் தலைவர் சுஆ.பொன்னுசாமி, மாநில பொது செயலாளர் எஸ்.மாரியப்பன், மாநில பொருளாளர் டி.எம்.எஸ் காமராஜ் மற்றும் மாநில நிர்வாகிகள் அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசனை சந்தித்தனர்.
அப்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர்களது ஆதரவிற்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார்.