ETV Bharat / state

மிரட்டும் மிக்ஜாம் புயல்..! சென்னை விமான நிலையத்தில் 65 விமானங்கள் ரத்து! - chennai news in tamil

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில், இதுவரையில் 65 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

michaung cyclone affected chennai international airport flight service
சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 11:22 AM IST

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கனமழை பெய்து வருவதால் விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் விட்டு விட்டுப் பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் 2 மணி நேரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை வரவிருந்த 23 விமானங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் தரையிறங்க இருந்த 11 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை (நவ.04) அபுதாபி, துபாய், மும்பை, பக்ரைன், இலங்கை, டெல்லி, புனே ஆகிய இடங்களில் இருந்து சென்னை வந்த பத்து விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

விமானச் சேவை ரத்து: சென்னையில் இருந்து இலங்கை, துபாய், விஜயவாடா, கோவை, திருச்சி, தூத்துக்குடி, சேலம், அகமதாபாத், மும்பை, மதுரை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டிய 11 விமானங்கள், இலங்கை, கோவை, திருச்சி, விஜயவாடா, ராஜமுந்திரி, சேலம், தூத்துக்குடி, கொச்சி, மும்பை, அகமதாபாத், மதுரை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இருந்து வர வேண்டிய 12 விமானங்கள், என மொத்தம் 23 விமானங்கள் இன்று இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் சென்னையிலிருந்து இந்தூர், புனே, பெங்களூர், அந்தமான், டெல்லி, மதுரை, லண்டன், மஸ்கட், குவைத் கோலாலம்பூர் உள்ளிட்ட 17 புறப்பாடு விமானங்கள், அதைப்போல் 15 வருகை விமானங்கள் என மொத்தம் 32 விமானங்கள், இதுவரை பல மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன.

அதிகாரிகள் அறிவுறுத்தல்: மிக்ஜாம் புயல் காரணமாக இன்று (நவ.04) பல விமானங்கள் ரத்து செய்யப்படலாம். அல்லது வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்படலாம். மேலும், சென்னையில் மோசமான வானிலை நிலவுவதால் விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

எனவே, பயணிகள் அனைவரும் விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன், அந்தந்த விமான நிறுவனங்களின் இணையதளங்களுக்குச் சென்று, விமானம் புறப்படும் நேரம், சென்னையை வந்தடையும் நேரம் உள்ளிட்டவற்றைச் சரிபார்த்த பின்னர் விமான நிலையத்திற்கு வருகை புரிய வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயலால் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பா..? மெட்ரோ நிர்வாகம் தெரிவித்தது என்ன..?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.