ETV Bharat / state

உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுகிறதா...? போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா...? - தனியார் பள்ளி

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுகிறதா, அதற்கான போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா என்பதை கண்காணிக்கவும், உறுதி செய்யவும் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Physical education  MHC queries  schools have sufficient physical education  physical education amenities  amenities of physical education  உடற்கல்வி  உள்கட்டமைப்பு வசதிகள்  உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம்  பள்ளிக்கல்வித் துறை செயலாளர்  பள்ளிக்கல்வித் துறை  தமிழ்நாடு அரசு  சென்னை உயர் நீதிமன்றம்  விளையாட்டு மைதானங்கள்  தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டம்  மத்திய இடைநிலை கல்வி வாரியம்  தனியார் பள்ளி  அரசு பள்ளி
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Sep 2, 2022, 7:45 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் உடற்கல்வி வழங்கும் வகையில் விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி, மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர் பி.ஆர்.சுபாஷ் சந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சென்னையில் உள்ள 1.434 பள்ளிகளில், 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் கிடையாது. அந்த பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், அருகில் உள்ள பொது விளையாட்டு மைதானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி கட்டாயமாக்கப்பட்டு, வகுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின் நீதிபதிகள், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டம், மத்திய இடைநிலை கல்வி வாரிய விதிகளை மேற்கோள் காட்டி, இவை காகித அளவிலேயே இருக்க அனுமதிக்காமல் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பிற பாடங்களைப் போல உடற்கல்விக்கும் சம முக்கியத்துவம் வழங்குவதை உறுதி செய்யவும், அவ்வப்போது ஆய்வு செய்யவும் வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதையும், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும். இதனை கண்காணிக்க பள்ளிக்கல்வித் துறை செயலாளர் தலைமையில் குழு ஒன்றை ஒரு மாதத்தில் அரசு அமைக்க வேண்டும்.

இந்த குழு உடற்கல்வி வழங்கத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளை அடையாளம் கண்டு அந்த பள்ளிகளில் உடற்கல்வி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இதுசம்பந்தமாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மின்கட்டணம் குறித்த மேல்முறையீட்டு மனு.. சிறப்பு நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.