ETV Bharat / state

'சீர்மிகு சட்டப்பள்ளியில் பயின்றவர்களுக்கும் உதவித்தொகை' - உயர் நீதிமன்றம் - Law students scholarship

அரசு சட்டக் கல்லூரிகளில் படித்த இளம் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் மூன்றாயிரம் ரூபாய் உதவித்தொகையை, சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவர்களுக்கும் வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC orderd for  Incentive to school of excellence students

author img

By

Published : Jul 12, 2021, 3:08 PM IST

சென்னை: அரசு சட்டக் கல்லூரிகளில் சட்டப்படிப்பு முடித்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் மூன்றாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின்கீழ், அரசு சட்டக் கல்லூரிகளுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும் எனவும், ஸ்கூல் ஆஃப் எக்சலன்ஸ் இன் லா (school of excellence in law) என்னும் சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்தவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வழக்கறிஞர் கற்பகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், இது சம்பந்தமான அரசின் அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும் எனவும், சீர்மிகு சட்டப் பள்ளியில் சட்டம் படித்தவர்களுக்கும் உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, அரசு சட்டக் கல்லூரி என்பது அரசால், அரசு நிதியுதவியால் நடத்தப்படுவது எனவும், அந்த வகையில் சீர்மிகு சட்டப் பள்ளியும், அரசால் நிர்வகிக்கப்படுவதால், அதுவும் அரசு சட்டக் கல்லூரிதான் எனக் கூறி, அந்தக் கல்லூரியில் படித்து வழக்கறிஞர்களாகப் பதிவுசெய்கிறவர்கள், பிற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்பட்சத்தில் உதவித்தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.