ETV Bharat / state

பக்கிங்ஹாம் கால்வாயை அழகுபடுத்தும்போது நகரம் அழகாகும் - உயர் நீதிமன்றம்

ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதனை முழுமையாக பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பக்கிங்ஹாம் கால்வாய்
பக்கிங்ஹாம் கால்வாய்
author img

By

Published : Apr 19, 2022, 8:17 PM IST

சென்னை: ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வரை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, 2014இல் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் இன்று (ஏப்ரல் 19) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கால்வாய்க்குள்ளும், கரையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், ஆக்கிரமித்தவர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ரகுநாதன் தெரிவித்தார்.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது என்பது, ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்றது எனத் தெரிவித்த தலைமை நீதிபதி, ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வரை உள்நாட்டு நீர்வழித்தடமாக இருந்த பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் முழுவதுமாக மோசமடைந்துள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, அதனை பழையபடி மீட்டெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பக்கிங்ஹாம் கால்வாயை அழகுபடுத்தும்போது நகரமும் அழகாகும் எனத் தெரிவித்த நீதிபதிகள், அதைத்தொடர்ந்து பராமரிப்பதில் மக்களுக்கும் பங்கு உள்ளது. தமிழ்நாட்டில் பாரம்பரியங்கள் உள்ளன எனப் பெருமை தெரிவித்தனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகள் நாளை விசாரணைக்கு வர உள்ளதால், இந்த வழக்கையும் அவற்றுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற அரசுத்தரப்பு கோரிக்கையை ஏற்று, விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு (ஏப்ரல் 20) தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: தெலங்கானா முதலமைச்சர் கேசிஆருடன் மோதல்? - ஆளுநர் தமிழிசை விளக்கம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.