ETV Bharat / state

கைவிடப்பட்ட தபால் பெட்டி மெட்ரோ ரயில் நிலையம்.. சென்னை உயர் நீதிமன்றம் கூறியது என்ன? - abandoned metro railway

2018ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட தபால் பெட்டி மெட்ரோ நிலையம் தொடர்பான மனுவை சென்ன உயர் நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

கைவிடப்பட்ட தபால் பெட்டி மெட்ரோ ரயில் நிலையம்.

author img

By

Published : Jul 9, 2023, 11:12 AM IST

சென்னை: மெட்ரோ ரயில் அமைக்கும் இரண்டாம் கட்டப் பணிகள் சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் மெட்ரோ ரயில் திட்டங்கள் அமைக்கும் பனியில் திருத்தங்கள் உள்ளதாக அறிவித்தனர். அதில் தபால் பெட்டி மெட்ரோ நிலையம் அமைக்கும் திட்டம் மாற்றப்பட்டதாக கூறியதையடுத்து, குடியிருப்பு வாரிய நலச் சங்கத்தின் செயலாளர் லூர்துராஜ் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் மாதவரம் முதல் சோழிங்கநல்லுார் வரையிலான வழித் தடத்தில் மாதவரம் பால் பண்ணை மற்றும் மூலக்கடைக்கு இடையில் தபால் பெட்டி நிறுத்தம் அமைக்க 2018இல் திட்டமிடப்பட்டது.

ஆனால், தற்போது தபால் பெட்டி நிறுத்தத்தை நீக்கிவிட்டு, முராரி மருத்துவமனை நிறுத்தத்தை அமைக்கும் வகையில் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மாதவரம் கே.கே.ஆர்.நகர் குடியிருப்பு வாரிய நலச் சங்கத்தின் செயலாளர் லூர்துராஜ் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிங்க: 'ஆளாளுக்கு அரசியல் பேசும்போது ஆளுநர் ஏன் அரசியல் பேசக்கூடாது' - தமிழிசை சௌந்தரராஜன்

அதில், தபால் பெட்டி மெட்ரோ நிலையம் இல்லாவிட்டால் குடியிருப்புவாசிகள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் அவதி அடைவார்கள் என்றும், இரவு நேரங்களில் ஆட்டோக்கள் எதுவும் கிடைக்காமல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

அதேநேரம், தபால் பெட்டி மெட்ரோ ரயில் நிலையம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாகவும், அலுவலகம், பள்ளி மற்றும் வீட்டிற்குச் செல்லும் நேரத்தை குறைக்கும் வகையிலும் இருக்கும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தபால் பெட்டி மெட்ரோ ரயில் நிலையத்தை கைவிடுவதற்கு முன்பாக முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்றும், தபால் பெட்டி மெட்ரோ நிலையம் இல்லாமல் தங்கள் குடியிருப்புகளின் கீழ் சுரங்கப் பாதை அமைக்கப்படும் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தபால் பெட்டி ரயில் நிலையம் அமைப்பது தேவையற்றது என கூறிய பின்னரே ரயில் நிலையம் அமைக்கும் பணி கைவிடப்பட்டதாக கூறினார்.

மேலும், தபால் பெட்டி ரயில் அமைப்பதை கைவிடுவதால் திட்டச் செலவினம் குறையும் எனவும் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள், நிபுணர்கள் அளித்த அறிக்கையில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

திட்ட செலவினத்தை கருத்தில் கொண்டே தபால் பெட்டி மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ’

இதையும் படிங்க: திருச்சியில் ரூ.120 கோடியில் பாலம்; அமைச்சர் எ.வ.வேலு தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.