தமிழ்நாட்டில் தினந்தோறும் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், வழக்கு ஒன்றின் விசாரணையில், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் காணொளி மூலமாக ஆஜராகி இருந்தார்.
அப்போது தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாரயணனிடம், தமிழ்நாட்டில் தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை மிக தீவிர பிரச்னையாக கருத வேண்டும்.
ஆனால், எவ்விதமான ஊரடங்கு கட்டுப்பாடுகளும் இல்லை. பொதுமக்களும் முகக்கவசம் அணிவதில்லை. தனி மனித இடைவெளி பின்பற்றுவதில்லை’ என வேதனைத் தெரிவித்தார். கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும், நோய் தாக்கத்தை குறைக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு தேவையான அறிவுரை மற்றும் நோய் தடுப்பிற்கு தேவையான மாற்றத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஒரே நாளில் 4 ஆயிரத்தை நெருங்கிய கரோனா பாதிப்பு